Face Upward - Widget

சாலை விபத்தில் இறந்து கிடக்கும் தாய் கதறி அழும் குழந்தை.. நெஞ்சை உருக்கும் காட்சி!. | Mother keep crying for baby dead road accident .. The heart touch of the scene. '

Loading...

இந்த விபத்து இந்தியாவில் நடைபெற்ற சம்பவமாகும்..விபத்தில் சிக்கிய பெண் 30 நிமிடம் வரை படுமோசமான காயத்துடன் உயிருக்கு போராடியுள்ளார் அப்பெண்ணின் கணவர் அங்கு செல்லும் வாகன ஓட்டிகளிடம் உதவிக்கு அழைத்துள்ளார் எவருமே உதவ முன் வராததால் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்..

இதில் கொடுரம் என்னவெனில் அப்பெண்ணின் குழந்தையின் கண் எதிரேயே தாய் மரணித்ததே....

ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இம் மாதிரியான சம்பவங்களை தவிர்க்க நாம் செய்ய வேண்டியது.....

சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு ஒவ்வொரு வினாடியும் மிக முக்கியமானது என்பதை உணர்ந்து விபத்தில், பாதிக்கப்படுவர்களுக்கு அலட்சியம் காட்டாமல் உதவி செய்யுங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்தவுடன் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல உதவுங்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதும் அவசியம்.

உரிய நேரத்தில் நீங்கள் செய்யும் உதவி ஒரு உயிரை காப்பாற்றப் போகிறது என்பதை மனதில் வைத்து யோசிக்காமல் களத்தில் இறங்குங்கள். மேலும், அவசர வேலை, முக்கிய வேலை என்று யோசிக்காதீர். ஒரு உயிரை காப்பாற்றுவதை விட இந்த உலகில் வேறு அவசர வேலை எதுவும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் என்று அலைய வேண்டியிருக்கும் என்று அச்சப்பட வேண்டாம். தற்போது விபத்தில் சிக்குபவர்களை மருத்துவமனையில் உடனே அனுமதிக்க சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சட்டத்தில் பல தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நீங்கள் உதவி செய்ய முன்வரும்போது அடுத்தவர் யோசிக்காமல் முன் வருவார். எனவே, விபத்தில் சிக்கி துடிதுடிப்பவர்களின் உயிரை மட்டுமல்ல, மறந்துபோன மனிதாபிமானத்தையும் சேர்த்து காக்க முன் வாருங்கள்....!


Loading...
tamizilnews. Powered by Blogger.