Face Upward - Widget

காதல் திருமணம் செய்த தேமுதிக எம்எல்ஏ மகள் போலீசில் ஆஜராக வேண்டும் | Love to appear at the police, who married the daughter of DMDK MLA

Loading...


சென்னை: 
காதல் திருமணம் செய்து கொண்ட தர்மபுரி தேமுதிக எம்.எல்.ஏ பாஸ்கரின் மகள் பவித்ரா பாதுகாப்பு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி சசிதரன் கடந்த திங்கட்கிழமை விசாரித்து போலீசார் பதில் அளிக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எம்எல்ஏ பாஸ்கர் சார்பாக வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி, எம்எல்ஏ மகள் உயிருடன் இருக்காரா இல்லையா என்று எங்களுக்கு தெரியவில்லை. தந்தையை சந்தித்து விட்டால் பெற்றோ ருடன் பெண் சேர்த்துவிடுவார் என்று கருதி பெற்றோரை சந்திக்க விடாமல் தடுக்க இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். எம்எல்ஏ யாரையும் மிரட்ட வில்லை.


மகள் கட்டாயத்தில் காதலனுடன் சென்றாரா என்று தெரியவில்லை. மகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம் என்றார். காதல் ஜோடிக்கு பாதுகாப்பு அளிக்க தயார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக் கப்பட்டது. இதையடுத்து , வரும் 30ம் தேதிக்குள் காதலனுடன் பவித்ரா சேலம் போலீஸ் கமிஷனர் முன் ஆஜராக வேண்டும். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தரவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
Loading...
tamizilnews. Powered by Blogger.