Face Upward - Widget

படுத்து தூங்கிட்டேன் - சன்னி லியோன் | Lie down to sleep - Sunny Leone

Loading...



சச்சின் ஜோஷியின் தீபாவளி விருந்தில் சன்னி லியோன் கலந்து கொள்ளாதது விருந்தினர்களுக்கு எதிர்பாராத அப்செட்டை தந்திருக்கிறது.


இணையத்தில் முழுமையாக த‌ரிசித்த சன்னி லியோனை பக்கத்தில் பார்க்க எல்லோருக்கும் ஆசை. நட்சத்திரங்களும் விதிவிலக்கல்ல. அவரை அருகில் பார்க்கலாம் (இணையத்துக்கும், நே‌ரில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை அறியும் க்யூ‌ரியாஸிட்டி) என்றிருந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றம். சன்னி லியோனும், அவரது கணவர் டேனியலும் ஆப்சென்ட்.


சச்சின் ஜோஷி ஜாக்பாட் படத்தில் சன்னி லியோனின் கோ ஸ்டார். படத்தின் தயா‌ரிப்பாளரும் அவர்தான். முதல் படம் தோல்வியடைந்து மீண்டும் போர்ன் படங்களில் நடிக்க கிளம்பிய சன்னி லியோனுக்கு அடுத்த வாய்ப்பை தந்தவர். இவ்வளவு முக்கியமானவ‌ரின் விருந்தை சன்னி லியோன் ஏன் புறக்கணித்தா‌ர்?


டேனியல் அதற்கு விளக்கம் தந்துள்ளார். டினா அண்ட் லுலு படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வந்திருக்கிறார் சன்னி. ராப்பகல் படப்பிடிப்பு. மும்பை வந்தவர் அசதியில் தூங்கிவிடவே பார்ட்டியில் கலந்து கொள்ளவில்லை. பார்ட்டியில் கலந்து கொள்ள சன்னி ரொம்பவும் ஆர்வமாக இருந்தார் என ஒரு வ‌ரியையும் டேனியல் சேர்த்திருந்தார்.


சச்சின் ஜோஷியை அந்த வ‌‌‌ரி திருப்திப்படுத்தும்.
Loading...
tamizilnews. Powered by Blogger.