Face Upward - Widget

முத்தக்காட்சியில் நடிப்பது தவறா? பிரீத்தி தாஸ் | Kiss acting in the wrong? Preeti Das

Loading...

சென்னை: மறுமுகம், உயிருக்கு உயிராக படங்களில் ஹீரோயினாக நடிக்கும் பிரீத்தி தாஸ், நிருபர்களிடம் கூறியதாவது: பஞ்சாப்பில் பிளஸ் டூ படித்தேன். பஞ்சாபி, மராத்தி, இந்தி, ஆங்கிலம், தமிழ் மொழிகள் தெரியும்.


மாடலிங் செய்தபோது, மறுமுகம் வாய்ப்பு வந்தது. இயக்குனர் கமல், தயாரிப்பாளர் சஞ்சய் ஆகியோர் தேர்வு செய்தனர்.


முதல் படத்திலேயே முத்தக்காட்சியில் நடிக்கும் கட்டாயம் ஏற்பட்டது. முதலில் மறுத்தேன். பிறகு அந்தக் காட்சியின் அவசியம் உணர்ந்து நடித்தேன். முத்தம் கொடுக்கும் காட்சி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டால் பரவாயில்லை.


இல்லையென்றால் திரும்பத் திரும்ப நடிக்க வேண்டியிருக்கும். இந்தப் படத்தில் எனது முத்தக்காட்சி கண்ணியமான முறையில் படமாக்கப்பட்டது.


அடுத்து, உயிருக்கு உயிராக படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளேன். இந்த படங்களில் ரிலீஸுக்குப் பிறகு கவனிக்கப்படுவேன் என்று நம்புகிறேன். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படத்தில் நடிக்க ஆசை.
Loading...
tamizilnews. Powered by Blogger.