இந்திய அணி டூருக்கு தென்ஆப்பிரிக்க இந்தியர்கள் எதிர்ப்பு | Indians protest the Indian team to tour South Africa
Loading...
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை நிர்வாக இயக்குனர் ஹாரூன் லார்கெட்டுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தொடர் நடைபெறுமா என்ற நிலை இருந்தது. ஆனால் அவர் மீது தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்து போட்டிகள் உறுதி செய்யப்பட்டன.
இந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் வெளிவரும் ஆங்கில பத்திரிகையில் வெளியான விநாயகர் கார்ட்டூன் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார்ட்டூனில் 4 கைகளுடன் விநாயகர் இருப்பது போல வும், ஒரு கையில் கிரிக்கெட் பேட்டும், மற்ற 3 கைகளிலும் பணத்தை கொடுப்பது போன்றும் உள்ளது. விநாயகர் பீடம் முன்பு ஹாரூன் லார்க்கெட்டை தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் பலிகடா கொடுப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த கார்ட் டூன் தென் ஆப்ரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை கண்டித்து லெனாசியா நகரில் டவுட்டெங் தமிழ் கூட்டமைப்பு சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த தலைவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கார்ட்டூனை வெளியிட்ட பத்திரிகை வருத்தம் தெரிவிக்காததால் அதனை புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.இந்து கடவுளை அவமதித்த கார்ட்டூனிஸ்ட் மன்னிப்பு கோர வேண்டும். மேலும் இந்திய தூதரை நேரில் சந்தித்து இந்தியாவின் தென் ஆப்ரிக்க தொடரை ரத்து செய்ய வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
Loading...
No comments: