Face Upward - Widget

இறக்குமதி அதிகரிப்பால் ரூபாய் மதிப்பு மீண்டும் சரிவு | The increase in the value of imports Rupees Value fall again

Loading...
ஒரு மாதம் முன்புதான் ரூபாய் மதிப்பு சடசடவென சரிந்து, ஓரளவு சீரானது. ஆனால், மீண்டும் தொடர்ந்து சரியுமா என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பக்கம் பெட்ரோலியம் உட்பட பல பொருட்களின் இறக்குமதி, அதனால் டாலர் கையிருப்பு சரிவு, அந்நிய முதலீடு குறைவதால் பாதிப்பு என்று பல வகையில் ரூபாய் மதிப்பை குறைக்க நமக்கு நாமே வலைகளை சிக்கலாக்கி கொண்டு விட்டோம். கடந்த மாதம் ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து 70ஐ நெருங்கியது.

எனினும் அதிரடியாக ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கையால் ஓரளவு சீரானது. எனினும் 60ஐ விட்டு இறங்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் இப்போது 63.90ஐ தொட்டுள்ளது. ஒரே நாளில் நேற்று 17 பைசா அதிகரித்து ரூபாய் மதிப்பு மேலும் சரிந்துள்ளது. இதனால் மேலும் சரியுமா என்ற அச்ச உணர்வு தொழில், வர்த்தக, பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ளது. இந்த முறை ரூபாய் மதிப்பு சரிந்ததற்கு காரணம் இரண்டு. ஒன்று, முன்பு போலவே அமெரிக்க மத்திய வங்கி, கையிருப்பு டாலரை அதிகரிக்க எடுத்த நடவடிக்கை.


இன்னொரு பக்கம், நம் பெட்ரோலிய கம்பெனிகள், எண்ணெய் இறக்குமதிக்காக , டாலரை செலவழிக்கும் சிறப்பு அதிகாரத்தை கண்டபடி பயன்படுத்தியதால். இதனால் டாலர் கையிருப்பு நம்மிடம் குறைந்து விட்டது. இதுவும் இந்த முறை ரூபாய் மதிப்பு சரிய காரணம். ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம் ராஜன் பொறுப்பேற்ற பின் தான் ரூபாய் மதிப்பு சற்று சீரானது. இப்போது அவர் கூறுகையில்,‘ ரூபாய் மதிப்பு குறைய முக்கிய காரணம், நடப்பு கணக்கு பற்றாக்குறை தான். கடந்த நிதி ஆண்டில் 8800 கோடி டாலராக இருந்தது.

இப்போது 5800 கோடி டாலராக குறைந்துள்ளது. இதுவே ஆறுதல் அளிக்க கூடியது என்றாலும் இன்னும் குறைக்க வேண்டும். குறிப்பாக சந்தையில் எண்ணெய் கம்பெனிகளுக்கு டாலர் தேவை அதிகரித்துள்ளதும் கவனிக்க கூடிய விஷயம். 3 எண்ணெய் நிறுவனங்களுக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு 35 கோடி டாலர் தேவைப்படுகிறது என்றார்.
Loading...
tamizilnews. Powered by Blogger.