Face Upward - Widget

கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்களுக்கு பெர்மிட் ரத்து | In addition to the fee collected Omni buses permit canceled

Loading...


தீபாவளிக்கு வெளியூர் செல்லும் 9 ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக குற்றம்சாற்றப்பட்டு 'பெர்மிட்' ரத்து செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து அபராதத் தொகையாக ரூ.5 லட்சம் வசூல் செய்யப்பட்டது.


தீபாவளி பண்டிகையை ஒட்டி தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தகவல் மையம் செயல்படுகிறது.


போக்குவரத்து அதிகாரிகளும் கடந்த சில நாட்களாக ஆம்னி பேருந்துகளில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம், எழும்பூர், பெருங்களத்தூர் ஆகிய இடங்களில் அதிகாரிகள் சிறப்பு சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது சில ஆம்னி பேருந்துகள் பிடிபட்டன.


இதுகுறித்து வடக்கு மண்டல போக்குவரத்து இணை கமிஷனர் விஜயராஜ் கூறியதாவது:-


நேற்று இரவு நடந்த அதிரடி சோதனையில் 85 ஆம்னி பேருந்துகளில் பல்வேறு குறைபாடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.96,900 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.


வரி செலுத்தாமல் ஓட்டப்பட்ட ஒரு ஆம்னி பேருந்து சிறைபிடிக்கப்பட்டது. அவர்களிடம் ரூ.3,67,௦000 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. பிற குற்றங்களுக்கு ரூ.43,000 வசூலிக்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலித்த 9 ஆம்னி பேருந்துகளின் பெர்மிட் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.


இவ்வாறு கமிஷனர் விஜயராஜ் கூறினார்.
Loading...
tamizilnews. Powered by Blogger.