Face Upward - Widget

மது பாட்டிலில் இந்து கடவுள்களின் படங்கள்: சர்ச்சை | Images of Hindu gods in the bottle of wine: controversy

Loading...


ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று தயாரித்த மது பாட்டிலில் இந்து கடவுள்கள் படங்கள் ஒட்டப்பட்டிருந்தது. இந்த மது பாட்டில்களை அமெரிக்காவில் விற்பனை செய்யக்கூடாது என்றும் பாட்டில்களை திருப்பி அனுப்ப வேண்டுமென்றும் அமெரிக்காவில் வாழும் இந்துக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள மது ஆலை ஒன்றில் இருந்து தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனை செய்ய அனுப்பப்பட்ட மது பாட்டில்களில், பிள்ளையார், லட்சுமி படங்கள் ஒட்டப்பட்டிருந்ததால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.


அந்த மது பாட்டிலில் இருக்கும் படத்தில், லட்சுமியின் உடலோடு பிள்ளையாரின் தலை இணைக்கப்பட்டுள்ளது. நெவாடா மாகாணத்தில் விற்பனை செய்யப்பட்ட இந்த மது பாட்டில்களை உடனடியாக திருப்பி அனுப்பும்படி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


இந்து கூட்டமைப்பின் தலைவர் ராஜன் செட் இது குறித்து கூறுகையில்,‘இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் மது பாட்டில்களில் இந்து கடவுள்களின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.


பல நாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பபட்டிருக்கும் இந்த மது பாட்டில்கள் உடனடியாக திரும்ப பெறப்படவேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய இந்த பாட்டிகளை திரும்பி அனுப்ப விற்பனையாளர்கள் தயாராக உள்ளனர் என்றும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Loading...
tamizilnews. Powered by Blogger.