Face Upward - Widget

தடை நீங்கியது - நாளை ராம் லீலா ரிலீஸ் | Has Gone Out ban - Ram Leela release tomorrow

Loading...



ஆபாசம், வன்முறை நிறைந்த ஒரு படத்துக்கு ராம் லீலா என்று பெயர் வைப்பதா? ராமனை படத்தில் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள். படத்தை தடை செய்ய வேண்டும், ராம் லீலா என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது. இந்து அமைப்புகளள் ராம் லீலாவுக்கு எதிராக ஆறு வழக்குகள் தொடர்ந்தன. அத்தனையையும் ஒரே விளக்கத்தால் சிதறடித்து தடை மீண்டிருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி.


எப்படி? பாட்ஷா ரஜினி மாதிரி உண்மையை சொன்னார், அவ்வளவுதான்.ராம் லீலா என்று பெயர் இருப்பதால் இந்திய புராணத்தை மையமாக வைத்து படத்தை எடுத்திருப்பாரோ என்று பலருக்கும் அச்சம். அதன் வெளிப்பாடுதான் இந்த வழக்கும் தடையும். ஆனால் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட்டின் இந்திய வடிவம்தான் ராம் லீலா. ரோமியோ ஜுலியட்டை இந்திய பின்னணியில் எடுத்திருக்கிறார்.


இந்த உண்மையை சொன்னதால் கோர்ட் படம் மீதான தடையை விலக்கிக் கொண்டது. திட்டமிட்டபடி நாளை படம் வெளியாகிறது.


இதற்கு முன் ஷேக்ஸ்பியரின் மெக்பத்தை மெக்பூல் என்ற பெயரிலும், ஒத்தெல்லாவை ஓம்காரா என்ற பெயரிலும் இந்தியப் பின்னணியில் இயக்குனர் விஷால் பரத்வாஜ் எடுத்திருக்கிறார். இரண்டுமே ஷேக்ஸ்பியரின் ஆக்கங்களுக்கு நியாயம் செய்யும் அற்புதமான படங்கள். ராம் லீலாவும் நியாயம் செய்யுமா? நாளை தெரிந்துவிடும்.
Loading...
tamizilnews. Powered by Blogger.