Face Upward - Widget

சிறுமியை செல்போனில் ஆபாசப்படம் எடுத்து மிரட்டல் | Girl on cell phone threatening to Pornography

Loading...

திருப்பூர் மாவட்டத்தில் 13 வயது சிறுமியை செல்போனில் ஆபாசப்படம் எடுத்து சிறுமியின் பெற்றோரிடம் காண்பித்து மிரட்டிய வாலிபரை காவல்துறையில் பொதுமக்கள் பிடித்துக் கொடுத்தனர்.


திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் மாரியம்மன் கோவில் முருகையர் வீதியை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் உதயகுமார் (வயது 28) எலக்ட்ரீசியன். இதே பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் வயது சிறுமி.


உதயகுமார் கடந்த சில மாதங்களாக சிறுமியின் மீது மோகமாக இருந்தார். அவரை அடைய திட்டமிட்டு சிறுமிக்கு தெரியாமல் தனது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்தார்.


இந்த நிலையில் நேற்று சிறுமியின் வீட்டுக்கு சென்ற உதயகுமார் சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உதயகுமாரிடம் முடியாது என்று கூறினர்.


இதனால் ஆத்திரமடைந்த உதயகுமார் தன்னுடைய செல்போனில் இருந்த சிறுமியின் ஆபாச படங்களை காட்டி மிரட்டினார். மேலும் சிறுமியை எனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.


இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உதயகுமாரை பிடித்து அடித்து உதைத்தனர். மேலும் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்திற்க்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உதயகுமாரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் ரத்தினசாமி தலைமையில் காவல் நிலையம் சென்று உதயகுமார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.


இதில் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ரத்தினசாமி காவல்துறையினரை கேவலமாக பேசியதாக தெரிகிறது. இதனால் விசாரணைக்காக ரத்தினசாமியை காவல் நிலையம் அழைத்து சென்ற நேற்று இரவு முழுவதும் அங்கேயே வைத்திருந்தனர். மேலும் காவல்துறையினர் அவரை அடித்ததாகவும் கூறப்படுகிறது.


இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் காவல்துறையினரை கண்டித்து கோஷம் போட்டனர்.


தகவல் அறிந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் கவுதமன் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் காவல் நிலையத்திலிருந்த ரத்தின சாமியை விடுவித்தார்.


பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து கொலை மிரட்டல் விடுத்த உதயகுமார் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதை தொடர்ந்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Loading...
tamizilnews. Powered by Blogger.