Face Upward - Widget

அப்பாவின் படங்களை தொட மாட்டேன் | Father Films will not touch

Loading...

தர்மேந்திராவின் இரண்டு மகன்களும் - சன்னி தியோல், பாபி தியோல் - பிரபலமான நடிகர்கள். என்றாலும் கான்கள் அளவுக்கோ, ரோஷன் அளவுக்கோ ஸ்டாராக இருவராலும் முடியவில்லை. தர்மேந்திராவின் மகள் இஷா தியோலாலும் சினிமாவில் பெரிதாக சாதிக்க முடியவில்லை.


சின்ன இடைவெளிக்குப் பிறகு சன்னி தியோலின் சிங் ஸாப் தி கிரேட் படம் வெளியாகியிருக்கிறது. சன்னி தியோலின் படங்களை நம்மூர் விஜயகாந்த் படங்களுடன் ஓரளவு ஒப்பிடலாம். தேசபக்தியும், ஹீரோயிஸமும் பொங்கி வழியும். ஏன், உங்கள் அப்பாவின் படத்தையே ரீமேக் செய்யலாமே என்று தியோல் சகோதரர்களிடம் கேட்காதவர்கள் இல்லை.


அந்த விஷயத்தில் இருவரையும் பாராட்டலாம். அப்பாவின் படங்கள் தனித்துவமானவை. அவற்றின் உட்பொருளை புரிந்து ரீமேக் செய்ய இன்றைய இயக்குனர்களால் முடியாது. அவற்றை அப்படியே ரசிப்பதுதான் நல்லது. அந்தப் படங்களிலிருந்து ஏதாவது ஐடியாவை எடுத்துக் கொள்ளலாமே தவிர, ரீமேக் செய்வது கூடாது. நான் ஒருபோதும் அந்தத் தவறை செய்ய மாட்டேன் என்று உறுதியாக கூறியிருக்கிறார் சன்னி தியோல்.


அப்பாவின் பெயரை இப்படியும் காப்பாற்றலாம்.
Loading...
tamizilnews. Powered by Blogger.