Face Upward - Widget

அழகியின் போலி வைர கிரீடத்தில் வெறும் கண்ணாடி கற்கள்! | Fake diamond crown of beauty in the plain glass stones!

Loading...


இந்த ஆண்டிற்கான ஆசிய பசிபிக் அழகியாக தேர்வு செய்யப்பட்டவரின் வைரங்கள் பதிக்கப்பட்ட கிரீடம் போலியானது எனக் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.


தென் கொரியாவில் கடந்த மாதம் 30 ஆம் தேதி ஆசிய பசிபிக் அழகி போட்டி நடைபெற்றது. 49 நாடுகளை சேர்ந்த பெண்கள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த 21 வயது சிரிஷ்டி ராணா முதல் இடத்தை பெற்றார்.


இதனை தொடர்ந்து அவருக்கு வைரங்கள பதித்த கிரீடத்தை கடந்த ஆண்டு இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஹிமாங்கினி சிங் யாது சூட்டினார்.


வெற்றி களிப்புடன் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தை வந்தடைந்த சிரிஷ்டி ராணாவிற்கு ஏராளமானனோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


ஆனால், அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது சூட்டப்பட்ட கிரீடத்தில் வைரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதால் அதற்கான இறக்குமதி சுங்க வரியை செலுத்திவிட்டு கிரீடத்தை பெற்று செல்லும்படி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கூறினர். தற்காலிகமாக அவர்கள் அந்த வைர கிரீடத்தையும் பறிமுதல் செய்துவைத்தனர்.


இந்நிலையில் மகுடத்தின் மதிப்பை கணக்கிட்டபோது தான் அது போலி என்பது தெரியவந்துள்ளது. அதில் வைரங்கள் போல ஜொலித்தது வெறும் கண்ணாடி கற்களாம். இதையடுத்து மகுடத்தை அதிகாரிகள் ராணாவிடம் திருப்பிக் கொடுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
tamizilnews. Powered by Blogger.