Face Upward - Widget

அனுஷ்காவுக்கு விரைவில் டும் டும் டும் | Dum Dum Dum Anushka soon

Loading...

அருந்ததி படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அனுஷ்கா. விஜய், சூர்யா மற்றும் விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் ருத்ரமாதேவி படத்தில் நடித்து வருகிறது.

விரைவில் இவர் நடித்த இரண்டாம் உலகம் படமும் வெளியாக உள்ளது. இந்நிலையில் இவர் புதுபட வாய்ப்புகளை தவிர்ப்பதால், திருமண ஏற்பாடுகள் நடப்பதாக பரவலாக பேசப்படுகிறது.

தற்போது 31 வயதாகும் அனுஷ்காவுக்கு, முகத்திலும் முதிர்ச்சி தெரிகிறது. இதனால் இளம் நடிகர்கள் அவரை ஓரம் கட்ட ஆரம்பித்து விட்டனராம். இதற்கிடையே பெற்றோரும் அனுஷ்காவுக்கு பொருத்தமான மாப்பிள்ளைகளை தேடி வருகின்றார்களாம்.

ஆந்திர தொழில் அதிபர்கள் பலர் அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்கள் ஜாதகங்களை வாங்கி பெற்றோர் பொருத்தம் பார்த்து வருகிறார்கள். நிச்சயமாக அடுத்த வருடம் ஆரம்பத்தில் அனுஷ்காவுக்கு திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading...
tamizilnews. Powered by Blogger.