Face Upward - Widget

கலங்கரை விளக்கத்தில் ஏறி சென்னையைப் பார்க்க ஆர்வமா? | do you Interested to see how Chennai in the lighthouse?

Loading...

மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தில் ஏறி சென்னை மாநகரின் அழகை ரசிக்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட முதல் நாளான நேற்று மட்டும் 3 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தனர்.


சென்னை, மெரினா கடற்கரை அருகே உள்ள கலங்கரை விளக்கம் 10 மாடி கொண்டது. இதன்மேல் ஏறி பொதுமக்கள் பார்க்க 1994 ஆம் ஆண்டு வரை அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக 1994 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று முதல் மெரினா கடற்கரை அருகே உள்ள கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். நேற்று முதல் நாள் என்பதாலும், விடுமுறை என்பதாகும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலங்கரை விளக்கத்தை பார்க்க குவிந்தனர். பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்ததால் நேற்று காலை 10 மணி முதலே கூட்டம் கடற்கரை சாலை வரை நீண்டது.


மாலை 4.55 மணிக்கு கலங்கரை விளக்கத்தில் ஏறி பார்ப்பதற்கான நேரம் முடிந்து விட்டதாக மைக்கில் அறிவிக்கப்பட்டது. இதனால் நீண்ட வரிசையில் நின்ற சுமார் 300 பேர் கலங்கரை விளக்க வளாகத்தில் உள்ள பெரிய இரும்பு கேட்டை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தனர். அவர்களை அங்கிருந்த போலீசாராலும் தடுக்க முடியவில்லை. இதையடுத்து உள்ளே வந்த அனைவரும் மாலை 6 மணி வரை பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.


மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசனும் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென கலங்கரை விளக்கம் வந்து ஆய்வு செய்தார். அங்கிருந்த பொதுமக்களிடம், கலங்கரை விளக்கத்தில் ஏறி பார்த்த அனுபவம் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். அப்போது சிலர், 10வது மாடியில் பொதுமக்கள் பார்வைக்காக புதிதாக வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பி வேலி கொஞ்சம் பெரியதாக உள்ளது. அதன் வழியாக தலையை வெளியே விட்டு பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் பார்க்கிறார்கள்.


இதனால் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறலாம் என்று கூறினர். உடனே, அங்கிருந்த கலங்கரை விளக்க அதிகாரிகளை அழைத்து, பாதுகாப்பு கம்பிக்கு நடுவே கூடுதலாக ஒரு தடுப்பு கம்பி அமைக்கும்படி உத்தரவிட்டார். நேற்று முதல்நாளில் மட்டும் பெரியவர்கள், சிறுவர்கள் என மொத்தம் 3 ஆயிரம் பேர் பார்வையிட்டதாக கலங்கரை விளக்க இயக்குனர் ராமநாதன் கூறினார்.


இதன்மூலம் 26,690 வசூலாகி உள்ளது.கலங்கரை விளக்கத்தை பார்வையிட்டு கீழே இறங்கிய பொதுமக்களிடம் கேட்டபோது, "கலங்கரை விளக்கம் மேலே இருந்து பார்த்தால் சென்னை நகரின் முழு அழகையும் ரசிக்க முடிந்தது. கிழக்கு பக்கம் பார்க்கும்போது மிக நீளமான மெரினா கடற்கரையை கண்டு ரசித்தோம். உயரமான கட்டிடத்தில் ஏறி சென்னை அழகை ரசிக்க முடியுமா? என்ற ஆசை இதன்மூலம் நிறைவேறி உள்ளது" என்று உற்சாகமாக கூறினர்.
Loading...
tamizilnews. Powered by Blogger.