Face Upward - Widget

டெல்லி தேர்தல்; ஷீலா தீட்சித்தை எதிர்த்து கெஜ்ரிவால் | Delhi election; Sheila titcittai against kejri wall

Loading...


டெல்லி தொகுதியில் ஷீலா தீட்சித்தும், அரவிந்த் கெஜ்ரிவாலும் நேரடியாக மோதுகிறார்கள்.


டெல்லி உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. டெல்லியில் டிசம்பர் மாதம் 4-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான மனுதாக்கல் தொடர்ந்து நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய (16-ந் தேதி) கடைசி நாளாகும்.


70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலில் இந்த முறை மும்முனை போட்டி நிலவுகிறது. ஆளும் காங்கிரஸ் ஒரு அணியாகவும், பாரதீய ஜனதா ஒரு அணியாகவும் போட்டியிடும் நிலையில் புதிதாக தோன்றிய அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் களத்தில் குதித்துள்ளது.


அரவிந்த் கெஜ்ரிவால் 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டார். அவர் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு பாரதீய ஜனதா வேட்பாளராக அந்த கட்சியின் முன்னணி தலைவர் விஜயேந்தா குப்தா நிறுத்தப்பட்டுள்ளார். 


காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. அதில் முதலலைச்சர் ஷீலா தீட்சித் டெல்லியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. நேற்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதே போல் பாரதீய ஜனதா வேட்பாளர் விஜயேந்தா குப்தாவும் நேற்று மனு தாக்கல் செய்தார்.


இதன் மூலம் டெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஷீலா தீட்சித்தும் நேரடியாக மோதுகிறார்கள். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு கட்சி தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இது முக்கியமான தேர்தலாகும். அவருக்கு மக்கள் அங்கீகாரம் அளிப்பார்களா? என்பது தெரிய வரும்.


ஷீலா தீட்சித் கடந்த 1998-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை முதல் மந்திரியாக இருந்து வருகிறார். தற்போது 4-வது முறையாக அவர் முதலமைச்சராவாரா? என்று இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


மனுதாக்கல் செய்த பின் நிருபர்களிடம் பேசிய ஷீலா தீட்சித் டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றார்.


பாரதீய ஜனதா சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக ஹர்சவர்தன் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் கிருஷ்ணாகர் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். மனு தாக்கலின் போது மாநில பாரதீய ஜனதா தலைவர் விஜய்கோயல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


மனுதாக்கலுக்குப் பின் நிருபர்களிடம் கூறிய ஹர்சவர்தன் இந்த தேர்தலில் காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாவுக்கும இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் கட்சிக்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள் என்றார்.


டெல்லியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 11,526,865. நேற்று ஒரே நாளில் 431 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 629 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
Loading...
tamizilnews. Powered by Blogger.