Face Upward - Widget

டெல்லி சட்டசபை தேர்தல்: தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு | Delhi assembly elections scheduled to candidates- DMDK

Loading...


டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

டெல்லியில் வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.


ஜங்புரா தொகுதியில் ஏ.சிவா, வசீர்பூர் தொகுதியில் எஸ்.ஈஸ்வரி, ஜனக்பூரியில் சொர்ணம் காளிதாசன், புது டெல்லியில் ஜி.எஸ்.மணி மற்றும் கல்காஜி தொகுதியில் ராமு ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.


மேலும் டெல்லி மாநில, மாவட்ட மற்றும் சார்பு அணி நிர்வாகிகளும், மகளிர் அணியினரும், தொண்டர்களும் அயராது தேர்தல் பணியாற்றி வேட்பாளர்களை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றும் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading...
tamizilnews. Powered by Blogger.