Face Upward - Widget

காங். பெண் எம்.எல்.ஏ.வை கொச்சைப்படுத்தி பேசிய வாலிபர் | Congress. koccaippatutti female MLA Speaking Youth

Loading...

இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக ஒரு தனியார் டிவி நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணியை தொலைபேசி மூலம் ஒருவர் கொச்சையாக பேசியுள்ளார்.


இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக ஒரு தனியார் டிவியில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள்.


இந்த நிகழ்ச்சியில் நேயர்கள் டெலிபோன் மூலம் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம்.


நேரடி ஒளிபரப்பின் போது எம்.எல்.ஏ. விஜய தாரணியிடம் பேசிய வாலிபர் ஒருவர் அவரை தரக்குறைவான ஆபாசமான வார்த்தையால் திட்டினார். அந்த வார்த்தை நேரடியாக டிவியில் ஒளிபரப்பானது.


இதையடுத்து விஜயதாரணி எம்.எல்.ஏ. நேற்று இரவு 11.30 மணிக்கு வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் செய்தார்.


கமிஷனர் சார்பில் கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் நரேந்திரநாயர் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனுவை பெற்றுக் கொண்டார். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


நேரடி நிகழ்ச்சி ஒளிபரப்பிய தொலைக் காட்சி நிறுவன அலுவலகம் ராயபுரத்தில் உள்ளது. இதையடுத்து ராயபுரம் போலீசார் புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.


சம்பந்தப்பட்ட தொலை பேசி எண்ணை வைத்து பேசி மிரட்டல் விடுத்தது யார் என்று போலீசார் துப்பு துலக்கியுள்ளனர். பேசியவர் யார் என்று அடையாளம் தெரிந்து விட்டது. அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.


இது தொடர்பாக விஜயதாரணி எம்.எல்.ஏ. கூறியதாவது, நான் டி.வி. நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது வாலிபர் ஒருவர் என்னை கொச்சைப்படுத்தும் வகையில் அவதூறாக பேசினார். அவர் பேசிய பேச்சு பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வாலிபர் மிரட்டும் வகையில் பேசிய ஆவணங்களை வாங்கி அதன் மூலம் வாலிபர் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
Loading...
tamizilnews. Powered by Blogger.