Face Upward - Widget

சீனாவில் ஒரு குழந்தைத் திட்டம் தளர்த்தப்படுவதாக அறிவிப்பு | Canceled Act a child per family in China

Loading...


சீனாவில் நடைமுறைப்படுத்தபட்டிருந்த ஒரு குழந்தைத் திட்டத்தைத் தளர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சீனாவில் அமல்படுத்தப்பட்டிருந்த ஒரு குழந்தைத் திட்டத்தைத் தளர்த்துவதாகவும், அந்நாட்டில் மனித உரிமை முயற்சியை மேம்படுத்தும் விதமாக நடைபெற்று வரும் தொழிலாளர் முகாம்களும் ஒழிக்கப்படுவதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


குடும்பத் திட்ட விதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தின் மூலம், பெற்றோரில் ஒருவர் ஒரு குழந்தையாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும், சில நகரங்களில் பெற்றோர் இருவரும் ஒரு குழந்தையாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும், சில இடங்களில் முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் அந்த தம்பதி இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீனாவில் இந்த சட்டம் அமலில் இருந்ததால், ஆண் - பெண் பிறப்பு விகிதம் மாறிவந்ததாகவும், இன்னும் 10 ஆண்டுகளில் சீனாவில் 24 மில்லியன் ஆண்கள் மணந்துகொள்ள பெண்கள் இல்லாமல் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்த சட்டம் தளர்த்தப்படாமல் இருந்தால் 2050 ஆம் ஆண்டில் சீனாவில் நான்கில் ஒரு பங்கு மக்கள் தொகை 65 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
tamizilnews. Powered by Blogger.