Face Upward - Widget

கிரிக்கெட் இல்லாமல் சச்சினை நினைத்துப் பார்க்க முடியவில்லை - அஞ்சலி டெண்டுல்கர்! | Can not imagine cricket without Sachin Tendulkar - Anjali Tendulkar!

Loading...


தனது கணவர் சச்சின் டெண்டுல்கரை கிரிக்கெட் இல்லாமல் பார்க்கப்போவதை நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை என்று சச்சின் மனைவி அஞ்சலி தெரிவித்துள்ளார்.


"கடைசி ஒருமாதம் மிகவும் கடினமாக இருந்தது. இந்த ஓய்வு பெறும் நாளைப் பற்றி நாங்கள் பேசும்போதெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு விடுவோம். கிரிக்கெட் இல்லாத டெண்டுல்கரை நினைத்துப்பார்க்கவே கடினமாக இருக்கிறது. டெண்டுல்கர் இல்லாமல் கிரிக்கெட் இருக்கலாம் ஆனால் கிரிக்கெட் இல்லாமல் டெண்டுல்கர் இல்லை" என்று அஞ்சலி தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.


"நான் அவர் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்த நாட்களைப்பார்த்ததேயில்லை. இங்கிலாந்தில் விடுமுறையில்


இருக்கும்போது கிரிக்கெட் ஆட்டத்தையே பார்த்தபடி இருப்பார். எப்போதும் ஆட்டம் பற்றிய எண்ணத்துடனேயே இருப்பார், அதிகம் சாப்பிடமாட்டார்.


சச்சின் உணர்ச்சிவசபடுவதை மறைத்துக் கொள்பவர் ஆனால் அவரே மும்பையில் உலகக் கோப்பையை வென்றபோது அனந்தக் கண்ணீர் வடித்தார்.


சாரா டெண்டுல்கர் அவரது தந்தை மாதிரி உணர்ச்சி வசப்படுவதை அடக்கிக்கொள்வார் மேலும் அவர் பிறக்கும்போது சச்சின் ஏற்கனவே ஸ்டார் ஆகிவிட்டார்.


இதே மைதானத்தில் சச்சின் 1987 உலகக் கோப்பையில் பந்து எடுத்துபோடும் பையனாக இருந்தார். இன்று தனது பையன் அதே பணியை செய்தது சச்சின் டெண்டுல்கருக்கு நெகிழ்ச்சியுட்டியுள்ளது.


வீட்டில் பெயிண்ட் பற்றி அடிக்கடி சச்சின் கவலை கொள்வார், இப்போது வீட்டுப் பொறுப்புகளை அவரிடம் விட்டு விடலாம் என்று நினைக்கிறேன்.


இவ்வாறு கூறினார் அஞ்சலி.
Loading...
tamizilnews. Powered by Blogger.