Face Upward - Widget

நண்பரிடம் மனைவியை விற்றவர் படுகொலை!

Loading...


ரூ.ஒன்றரை லட்சத்திற்கு கட்டிய மனைவியை நண்பருக்கு விற்ற நபர் மீண்டும் மனைவியை குடும்பம் நடத்த அழைத்தார். ஆனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இது வேறு எங்கும் நடக்கவில்லை. நம் தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில்தான்!


மதுரை அழகப்பன் நகர் முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் நாகலிங்கம் இவர் வயது 27, கொத்தனார் வேலைபார்த்து வந்தார்.


இவரை ஒரு மர்ம கும்பல் ஒன்று காரில் வந்து படுகொலை செய்துவிட்டுச் சென்றது. விஷயம் போலீஸுக்குச் சென்றபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின:


கொத்தனார் நாகலிங்கத்தின் மனைவி சத்தியா இருவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து 2 மகன் உள்ளனர்.


நாகலிங்கத்தீன் வீட்டிற்கு அவரது நண்பர் ஜாகீர் உசேன் அடிக்கடி வந்து போவதுண்டு. இதில் நாகலிங்கத்தின் மனைவிக்கும் ஜாகீருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இது நாகலிங்கத்திற்கும் தெரியவந்தது.


இருவரிடமும் பேசினார் நாகலிங்கம். இருவரும் தொடர்பை ஒப்புக் கொள்ள கூலாக கொத்தனார் நாகலிங்கம் மனைவி சத்தியாவை நண்பருக்கே விற்று விட முடிவு செய்தார்!!


நாகலிங்கத்திற்கும் இந்த டீல் பிடித்துபோக ஒன்றரை லட்சம் பணத்தை கொடுத்து ஜாகீர் உசேன் சத்தியாவை விலைக்கு வாங்கியுள்ளார்!! இருவரும் தென் காசிக்குச் சென்றனர், குழந்தைகளும் சத்தியாவுடன் சென்றனர்.


தனியாக வதைபட்ட நாகலிங்கம் தீபாவளிக்கு மனைவியை பார்க்க தென்காசிக்கு சென்றார். அப்போது தெரியாமல் விற்று விட்டேன். மறுபடியும் வா குடும்பம் நடத்தலாம் என்று கூறியுள்ளார்.


அதற்கு சத்தியா...


நீங்கள்தான் என்னை விற்றுவிட்டீர்கள் பின்னால் ஏன் வருகிறீர்கள் என்று கண்டித்துள்ளார். அப்போது அங்கு வந்த ஜாகீர் உசேன் இனிமேல் இங்கு வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினார்.


ஆனால் நிச்சயம் நாகலிங்கம் அடிக்கடி வந்து தொந்தரவு செய்வார் என்று கருதிய ஜாகீர் நாகலிங்கத்தை போட்டுத் தள்ள முடிவெடுத்தார்.


இதனையடுத்து சம்பவ தினத்தன்று ஜாகீர் உசேனும் அவரது தம்பியும் காரில் வந்து காரியத்தை முடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.


இப்போது ஜாகீர் உசேன் சிறையில்!


சத்தியாவின் கதி மிகவும் பரிதாபமான ஒன்று! இரண்டு குழந்தைகளுடன் கணவனையும் இழ்னது தற்போது புதுக் கணவன் ஜாகீரையும் சிறைக்கு காணிக்கை கொடுத்து விட்டார்.


சினிமாவைவிடவும் வாழ்க்கை மிகவும் கொடூர்மானது என்பதற்கு இதை விடவும் சிறந்த உதாரணம் வேண்டுமோ?


தாமஸ் ஹார்டி என்ற பழம்பெரும் ஆங்கில எழுத்தாளரின் நாவல் ஒன்று இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
Loading...
tamizilnews. Powered by Blogger.