Face Upward - Widget

நிலாவில் துளசி, முள்ளங்கி வளர்க்கும் நாசா! | Basil on the moon, NASA will develop a radish!

Loading...


அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சந்திரனில் தாவரங்கள் வளரச்செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


வருகிற 2015 ஆம் ஆண்டு, சந்திரனில் தாவரங்கள் வளர்க்கும் ஆராய்ச்சியை வெற்றிகரமானதாக நடத்தவேண்டுமென முடிவு செய்துள்ள நாசா நிறுவனம், முதற்கட்டமாக அங்கு துளசி, டர்னிப் போன்றவற்றை வளர்க்க முயற்சித்து வருகிறது


சந்திரனில் இந்த வகை தாவரங்களின் விதைகளை முளைக்க வைத்து அதன் மூலம் அங்கு நீண்ட நாட்களுக்கு மனிதன் தங்கி உயர் வாழ முடியுமா என்ற ஆய்வையும் தொடர்ந்து நடத்த நாசா திட்டமிட்டுள்ளது.


இத்திட்டத்தின்படி, ஒரு சிறிய பெட்டகம் போல இருக்கும் கருவியில், இந்த தாவரங்களின் விதைகள் வைக்கப்படும். இது சந்திரனை அடைந்ததும், சிறிய அளவு நீர் அந்த விதைகளுக்கு அளிக்கப்படும், அந்த பெட்டகத்தினுள் இருக்கும் காற்று, விதைகள் 5 முதல் 10 நாட்கள் வளர போதுமானதாக இருக்கும்.


அந்த சூழலில் விதைகளின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பது குறிப்பிட்ட இடைவெளியில் புகைப்படம் எடுக்கப்படும். இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை வைத்து சந்திரனில் மனிதன் நீண்ட நாட்கள் வாழ என்ன சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது ஆராயப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading...
tamizilnews. Powered by Blogger.