Face Upward - Widget

பால்கி படத்தில் அக்சரா - உறுதி செய்த கமல்| Balki film akcara - ensuring Kamal

Loading...



கோவா‌வில் நடந்து வரும் 44வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக கோவா சென்றுள்ளார் கமல். விழாவின் தொடக்கநாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


அப்போது பத்தி‌ரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.


அவ‌ரின் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன் இருவரையும் பற்றி கேட்கப்பட்டது. ஸ்ருதிஹாசனின் வளர்ச்சி திருப்தி அளிப்பதாக குறிப்பிட்ட கமல்ஹாசன் அக்சராஹாசன் பால்கியின் படத்தில் அறிமுகமாவது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெ‌ரிவித்தார்.


கமல்ஹாசனின் இளைய மகள் அக்சராஹாசன் மும்பையில் தனது தாய் ச‌ரிகாவுடன் வசித்து வருகிறார். இயக்குனராகும் ஆசையில் சில படங்களில் உதவி இயக்குனராகவும் பயணியாற்றினார். இந்நிலையில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் அவரை தேடி வந்தன. பால்கியும் தனது புதிய படத்தில் கேட்க, அவரும் நடிப்பதற்கு தனது சம்மதத்தை தெ‌ரிவித்துள்ளார்.


சீனிகம், பா படங்களைத் தொடர்ந்து அமிதாப்பச்சனை வைத்து தனது மூன்றாவது படத்தை பால்கி இயக்குகிறார். இளையராஜா இசை, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு. தனுஷ் முக்கிய வேடமேற்கிறார். அக்சரா தனுஷ் ஜோடியாக நடிப்பார் என தெ‌ரிகிறது.
Loading...
tamizilnews. Powered by Blogger.