Face Upward - Widget

'ஆன்டி பிளவர் அவர் வேலையைப் பார்க்கட்டும்' | 'Andy Flower for them to work'

Loading...


ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பன் மைதானத்தில் பல சர்ச்சைகளுடன், ஆஸ்ட்ரேலிய வெற்றியுடன் முடிந்தது.
மிட்செல் ஜான்சன் வசை மாரி பொழிந்தது. மைக்கேல் கிளார்க், ஆண்டர்சனின் கையை ஒடித்து விடுவேன் என்று கூறி அபராதம் விதிக்கப்பட்டது, விடலைப்பையன் டேவிட் வார்னர் ஜானதன் டிராட்டிற்கு ஆட வரவில்லை என்று கூறியது என்று பலவிதமான சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது அந்த டெஸ்ட்.


இந்த நிலையில், இங்கிலாந்து பேட்டிங் ஆலோசகர் ஆன்டி ஃபிளவர், இரு அணிகளும் சுமுகமாக நடந்து கொள்ளவேண்டும் என்பதற்காக ஆஸ்ட்ரேலிய பயிற்சியாளர் டேரன் லீ மேனை அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார்.


பேச்சு வார்த்தையெல்லாம் தேவையில்லை...


என்று லீ மேன் வன்மமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பது மேலும் அராஜகமே:


என்னைப்பொருத்தவரையில் ஆண்டி பிளவர் இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்தும் வேலையை செய்யட்டும், நான் எங்கள் அனியை பார்த்துக் கொள்கிறேன். எங்களுக்கு முக்கியம் தொடரை ஜெயிப்பது என்ற ஒற்றைக் குறிக்கோள்தான்.


ஸ்லெட்ஜிங் என்பது கிரிக்கெட்டில் சகஜம், இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் முதிர்ச்சியுடையவர்கள் அவர்கள் இதிலிருந்து நிச்சயம் மீள்வார்கள்.


இங்கிலாந்தில் நாங்கள் இதுபோன்று நிறைய எதிர்கொண்டோம், ஆனால் நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. வெளியே சென்று ஆடினால் இதெல்லாம் நடக்கத்தான் செய்யும். ஆனால் இதெல்லாம் பிட்சில் மட்டுமே இருக்கவேண்டும், அதற்கு வெளியே ஒருவருக்கொருவர் மரியாதைக் குறைவாகப் பேசுவதை ஏற்கமுடியாது.


இவ்வாறு கூறியுள்ளார் டேரன் லீ மேன்
Loading...
tamizilnews. Powered by Blogger.