Face Upward - Widget

நடிகர் சிட்டிபாபு கோமாவில் மூழ்கியதாகத் தகவல்! | Actor cittipapu the information sunk in a coma!

Loading...


ஜெயா தொலைக்காட்சியின் ஹரிகிரி அசெம்ப்ளி மூலம் பலரையும் கலாய்த்து தனக்கென ஒரு தனி முத்திரைப்பதித்த சிட்டிபாபு பிறகு அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.


பிறகு அவர் பைவ் ஸ்டார், ஒற்றன், பாய்ஸ், தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருப்பவர், சிட்டிபாபு. இவர் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இருதய கோளாறு காரணமாக, 'பைபாஸ் ஆபரேஷன்' செய்து கொண்டார். அதன்பிறகு 2 வருடங்களாக அவர் நடிக்கவில்லை.


சமீபகாலமாக அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நேற்று முன்தினம்...


அவர் திடீர் என்று மயங்கி விழுந்தார். கவலைக்கிடமான நிலையில், அவரை சென்னை முகப்பேரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.


ஆஸ்பத்திரியில் அவருடைய நிலைமை மிகவும் மோசமானது. சுய நினைவை இழந்து, 'கோமா'வில் மூழ்கினார். சிட்டிபாபுவின் மூளையில் கட்டி இருப்பதாகவும், அதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
Loading...
tamizilnews. Powered by Blogger.