Face Upward - Widget

ஸ்ட்ரைக் கிடைக்காததால் வெறுப்பில் அவுட் ஆன கோலி!

Loading...

விவ் ரிச்சர்ட்ஸின் 5000 ரன் சாதனையையே என்ன சேதி என்று கேட்ட இந்தியாவின் அடுத்த நட்சத்திரம் வீரத் கோலி நேற்று மேலும் ஒரு சதம் எடுத்திருப்பார் ஆனால் எதிர்முனையில் விளையாடிய வீரர்களின் லொட்டு ஆட்டத்தினால் வெறுப்படைந்து 99 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.

விசாகப்பட்டிணத்தில் கோலி நேற்று 90 ரன்களை 36வது ஓவைலேயே கடந்து விட்டார். ஆனால் பவர் பிளே நடந்து கொண்டிருக்கும் போது கூட 40வது ஓவரில் அவர் 99 ரன்களையே எட்டியிருந்தார்.

காரணம் கோலி அல்ல.இந்த காலக்கட்டத்தில்தான் ரெய்னாவும், தோனியும் லொட்டு லொட்டென்று லொட்டு வைத்து கோலிக்கு ஸ்ட்ரைக் கிடைக்காமல் செய்தனர். 37வது ஓவர் தொடங்கியது முதல் 40வது ஓவர் வரை கோலிக்கு கிடைத்தது 9 பந்துகளே.

கடைசியாக பவர் பிளேயின் கடைசி பந்தில், அதாவது 40வது ஓவரின் கடைசி பந்தில் ஸ்ட்ரைக் கிடைத்தது பவர் பிளே ஆயிற்றே அவர் ஹூக் ஆடினார். ஆனால் அது ஜேசன் ஹோல்டரால் கேட்ச் பிடிக்கப்பட்டது. இது தெரியாமல் அவர் சதம் எடுத்ததாக நினைத்து இந்திய வீரர்கள் கையைத் தட்டினர். இது கோலியின் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சியிருக்கும்.

இந்த ஷாட்டை அவர் ஆடியிருக்கவேண்டியதில்லை. ஒரு ரன்னுக்கு ஹூக் தேவையில்லை. ஆந்னால் கடும் ஆத்திரத்தில் இருந்த அவர் போங்கடா நீங்களும் உங்க ஆட்டமும் என்று அந்த ஷாட்டை ஆடியதாகவே தெரிகிறது. இது கிரிக்கெட்டில் சகஜமே. ஷார்ஜாவில் ஒருமுறை கங்கூலி அப்படித்தான் ஒரு ஓவரில் 4 பந்துகளை லொட்டு வைத்து விட்டு 5வது பந்தில் சிங்கிள் எடுப்பது அல்லது 6வது பந்தில் சிங்கிள் எடுப்பது. இப்படியே 4 ஓவர்கள் விளையாடினார். சச்சின் ஸ்ட்ரைக் கிடைத்த முதல் இரண்டு பந்துகளையும் ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் காஸ்பரோவிக்சை சிக்சர் அடித்தார். 2 ஷாட்களும் வெறுப்பில் அடித்தவையே, அதை அடித்து அவர் அவுட் ஆகியிருந்தால் சச்சின் மீது குறை கூற முடியாது. எதிர்த்தால் போல் ஆடிய கங்கூலியே முழு பொறுப்பு.

அதேபோல் நேற்று கோலி அவுட் ஆந்னதற்குக் காரணம் அவரது இன்னிங்ஸ் பாதியிலேயே முடிந்ததற்குக் காரணம் அவர் அல்ல. மாறாக தோனியும், ரெய்னாவும் போட்ட மட்டையே!


பவர் பிளேயில் தொடர்ச்சியாக ஏதாவது ஒரு ஓவரில் கோலி ஆடியிருந்தால் பாவம் சதம் எடுத்திருப்பார். ரெய்னாவும், தோனியும் போட்ட மட்டையில் கோலி சதத்தை கோட்டைவிட்டது உண்மையில் அவரை வெறுப்படையச்செய்திருக்கும்.


மேலும் அவர் சதம் எடுத்து நின்றிருந்தால் ஸ்கோர் 320 ரன்களைத் தாண்டியிருக்கும், இந்தியாவும் வெற்றி பெற்றிருக்கும். ரெய்னாவும், தோனியும் இனியாவது எதிரில் இருக்கும் பேட்ஸ்மெனின் மன நிலையை புரிந்து ஆடுவார்களா?
Loading...
tamizilnews. Powered by Blogger.