Face Upward - Widget

90 வயதில் தனிமை, வறுமையில் வாடும் இளவரசி | At the age of 90 in the isolated, impoverished Princess

Loading...

மியான்மரில் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி ஒருவர் 60 வருடங்களாக சாதாரண பெண்ணை போல் ஒரு சிறிய அபார்ட்மெண்டில் வாழ்ந்துவருகிறார்.


மியான்மரில் மன்னர் ஆட்சி நடந்தப்போது திபவு என்பவர் கடைசி மன்னராக இருந்தார். ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது கடந்த 1885 ஆம் ஆண்டில் இவரது அதிகாரம் பறிக்கப்பட்டது.


அதையடுத்து மன்னர் பரம்பரை ஒழிக்கப்பட்டு அவர்களது குடும்பத்தினர் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்துவந்தனர். அந்த அரச குடும்பத்தில் பிறந்த திபவுவின் பேத்தியான இளவரசி ஹிடெக் சு பாயா ஜி என்பவருக்கு இப்போது வயது 90.


தற்போது யங்கூன் நகரில் ஒரு சிறிய வீட்டில் வாழ்கிற இவர் யார் என்பது கூட அண்டை வீட்டாருக்கு தெரியவில்லை.


தன்னுடைய இளமை காலங்களில் அரண்மனை, செல்வம், மரியாதை என வாழ்ந்த இந்த இளவரசி தற்போது அந்த நினைவுகளோடு மட்டும் வாழ்வதாக கூறியுள்ளார்.
Loading...
tamizilnews. Powered by Blogger.