Face Upward - Widget

90 வயதில் இளம்பெண்ணுடன் தகாத உறவு; மனைவி புகார் | 90-year-old Man in a sexual relationship with the young girl wife Report

Loading...


இளம்பெண்ணுடன் 90 வயது கணவர் தகாத உறவு வைத்துள்ளதாக நெல்லை மகளிர் போலீசில் 80 வயது மூதாட்டி புகார் அளித்துள்ளார்.


நெல்லை தச்சநல்லூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ராமையா(90). தச்சநல்லூரில் உள்ள மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கண்ணம்மாள்(80). இவர் பழ வியாபாரம் செய்கிறார். இந்நிலையில் நெல்லை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் கணவர் ராமையாவுக்கு தொடர்பு இருப்பதாக கண்ணம்மாள் நெல்லை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.


அதில் கூறியிருப்பதாவது: கணவர் ராமையா மீனாட்சிபுரத்தில் உள்ள இளம்பெண் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருகிறார். அவருடன் தொடர்பு வைத்துள்ளார். இந்த வயதிலும் அவர் மிட்டாய், பூ ஆகியவை வாங்கி செல்கிறார். சம்பளத்தை என்னிடம் தராமல் அவருக்கு கொடுக்கிறார். வீட்டில் உள்ள பொருட் களையும் எடுத்துச் சென்று அவரிடம் கொடுக்கிறார். தீபாவளியையொட்டி நான் வீட்டில் வைத்து இருந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்து சென்றுவிட்டார். இதுகுறித்து கேட்டால் அவர் என்னை திட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 90 வயது கணவர் தகாத உறவு வைத்திருப்பதாக போலீசில் 80 வயது மூதாட்டி புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading...
tamizilnews. Powered by Blogger.