Face Upward - Widget

80 பேருக்கு மரண தண்டனை-வட கொரியாவில் பயங்கரம்? | 80 people sentenced to death - terror in North Korea?

Loading...


தென் கொரிய டிவி நிகழ்ச்சிகளை பார்த்ததற்காக 80 பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை விதித்துள்ளது வட கொரிய அரசு என்று பரபரப்பு செய்தி ஒன்றை தென் கொரிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.


இதனை வதந்தி என்று வடகொரியா மறுத்தாலும் இந்தச் செய்தியை வெளியிட்ட தென் கொரிய பத்திரிக்கை வடகொரியாவின் அரசியல், நிகழ்வுகளுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால் இந்தச் செய்தியின் நம்பகத்தன்மையும் சந்தேகிப்பதற்கில்லை என்று கூறப்படுகிறது.


வடகொரியாவிலிருந்து தற்போது திரும்பியுள்ள ஒருவர் இந்த செய்திப் பத்திரிக்கைக்குக் கூறும்போது நவம்பர் 3ஆம் தேதி 7 நகரங்களில் இந்த 80 பேரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார்.


வடகொரியாவின் கிழக்கு துறைமுக நகரான வோன்ஸானில் 10,000 பேரைக் கூட்டி ஒரு விளையாட்டு மைதானத்தில் 8 பேரை சுட்டுக் கொன்றதாக நேரில் பார்த்த சாட்சியம் தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.


தென் கொரியாவிலிருந்து கள்ளத்தனமாக இறக்கும்தி செய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இவர்கள் பார்த்ததாக குற்றச்சாட்டு.


முதலாளித்துவ தென் கொரிய டிவி தொலைக்காட்சிகளை வடகொரியா தடை செய்துள்ளது. ஆனாலும் டிவிடிக்கள் உள்ளிட்ட பல தொழில் நுட்பங்களின் உதவியுடன் அந்நிகழ்ச்சிகள் இங்கு வந்து சேர்கின்றன.


இருப்பினும் இந்த 80 பேர் மரண தண்டனை பற்றிய உறுதியான தகவல்கள் இல்லை!!
Loading...
tamizilnews. Powered by Blogger.