Face Upward - Widget

ஷமி 5விக்.; கேப்டன் தோனியின் புதிய சாதனை! | Sami 5 wickets.; Captain Dhoni's new record!

Loading...

இந்தியாவின் புதிய வேகப்புயல் மொகமட் ஷமி கொல்கட்டா டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை சாய்த்தார். குறிப்பாக 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை சாய்த்ததன் மூலம் முதல் டெஸ்டிலேயே 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஒரு போட்டியில் 9 விக்கெட் இந்தியாவில் இந்திய வீச்சாளர் எடுத்த 4வது அதிகபட்ச டெஸ்ட் விக்கெட்டுகள் ஆகும்.

முன்னதாக ஜவகல் ஸ்ரீனாத்த் கொல்கட்டாவில் 1999 ஆம் ஆண்டு 13 விக்கெட்டுகளை சாய்த்தார். அது பாகிஸ்தானுக்கு எதிராக. இதற்கு முன்னர் கபில்தேவ் அந்த புகழ்பெற்ற ஆமதாபாத் டெஸ்ட் போட்டியில் 1983ஆம் ஆண்டு பலமான மேற்கிந்திய பேட்டிங் வரிசைக்கு எதிராக 10 விக்கெட்டுகளை சாய்த்ததே சாதனையாக இருந்தது.


நரேந்திர ஹிர்வாணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சென்னையில் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பிறகு தற்போது மொகமட் ஷமிதான் முதல் டெஸ்டிலேயே அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக திகழ்கிறார்.


இதற்கு முன்னர்...


இந்திய டெஸ்ட் வரலாற்றில் இப்போதுதான் முதல் முறையாக 5 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றுள்ளது ஆஸ்ட்ரேலியாவுக்கு 4- 0 என்று உதை கொடுத்த பின்பு தற்போது முதல் டெஸ்டை வென்றது மூலம் 5 டெஸ்ட் தொடர் வெற்றிகள் தோனியின் புதிய இந்திய சாதனையாக மிள்கிர்கிறது. இதற்கு முன்னால் 4 முறை 4 டெஸ்ட் தொடர் வெற்றிகளை இந்தியா பெற்றுள்ளது.


6ஆம் நிலையில் களமிறங்கி அறிமுக டெஸ்டில் அதிகபட்ச ரன்களை சதத்துடன் எடுத்த டக் வால்டர்ஸ் (155, ஆஸ்ட்ரேலியா, இங்கி.க்கு எதிராக) சாதனியை அதே டவுனில் இறங்கி ரோகித் சர்மா முறியடித்துள்ளார். இவர் 177.


அறிமுக டெஸ்டிலேயே ஆட்ட நாயகன் விருது பெறும் 5வது இந்திய வீரராகிறார் ரோகித்.


அதே போல் 8ஆம் நிலையில் களமிறங்கி 2வது சதத்தை எடுத்துள்ளார் அஷ்வின், அவரது சராசரி 41.11, 690 டெஸ்ட் ரன்களை அவர் எடுத்துள்ளார்.


ஒரே டெஸ்டில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் சாதனையை அஷ்வின் 2வது முறையாக செய்யும் ஒரே இந்திய ஆல்ரவுண்டராகிறார்.


ரோகித் சர்மாவும், அஷ்வினும் 7வது விக்கெட்டுக்காக சேர்த்த 280 ரன்கள்தான் இந்தியாவின் இந்த விகெட்டுக்கான அதிகபட்ச ஜோடி ரன்களாகும். 2010ஆம் ஆண்டு தோனியும், லஷ்மணும், இணைந்து கொல்கட்டாவில் 259 ரன்கள் சேர்த்ததே 7வது விக்கெட்டுக்கான சிறந்த ஜோடி ரன்களாக இருந்தது. இதுவும் கொல்கத்தாவிலேயே என்பது சுவையான தற்செயல்.


8வது முறையாக தோனி கேப்டன்சியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. கங்கூலி இந்த வகயில் 7 என்று 2ஆம் நிலையில் உள்ளார். அசாருதீனும், தோனியும் முதலிடம்.
Loading...
tamizilnews. Powered by Blogger.