Face Upward - Widget

சாலைகளில் லஞ்சம் மட்டும் ரூ.22,000 கோடி! | Only Rs .22,000 crore bribes on the roads!

Loading...


அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆண்டுதோறும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் அதிகாரிகளுக்கு ரூ.22,000 கோடி வரை லஞ்சம் கொடுப்பது தெரியவந்துள்ளது.


லூதியானா, டெல்லி, அகமதாபாத், இண்டோர், மும்பை, கொல்கத்தா, விஜயவாடா, பெங்களூர் மற்றும் சென்னை போன்ற நகரங்களில் சுமார் 1,200 டிரக் ஓட்டுனர்களிடம் போக்குவரத்து அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.


அதன்படி, ஆண்டுதோறும் சாலையில் செல்லும் டிரக், கன ரக வாகன ஓட்டுனர்களிடம் இருந்து போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் பெறும் லஞ்சத் தொகை மட்டும் ரூ.22,000 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சாலைகளில் செல்லும் டிரக் மற்றும் கனரக வாகன ஓட்டுனர்களின் 77 சதவீதம் பேர் தங்களுக்கு போலீசாரால் தொல்லை ஏற்படுவதாகவும், 73 சதவீதம் பேர் போக்குவரத்து துறை அதிகாரிகளால் தொந்தரவு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


ஆய்வில் பங்கேற்ற 60 சதவீத ஓட்டுனர்கள் பல சமயங்களில், போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் காரணம் இல்லாமல் வாகனங்களை நிறுத்தி பணம் பறிக்கிறார்கள் என்று கூறியுள்ளதாக தெரிகிறது.


முறையான ஆவணங்கள் இல்லாமல் செல்லும்போது தண்டனையில் இருந்த தப்பிக்க லஞ்சம் கொடுப்பதாக ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும், போக்குவரத்து துறை அதிகாரிகள் பதிவு எண் மற்றும் தகுந்த சர்டிபிகேட் வழங்க, அதிக அளவில் லஞ்சம் பெறுவதாகவும் இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading...
tamizilnews. Powered by Blogger.