Face Upward - Widget

2015 உலக கோப்பை: இந்தியா வெல்வது கடினம்! | 2015 World Cup: India is Very Difficult to win!

Loading...



மும்பை: 2015ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியா, நியூசீலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா இந்த பந்து வீச்சை வைத்துக் கொண்டு கோப்பையை வெல்வது கடினம் என்று இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா கூறியுள்ளார்.


மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அர்ஜுனா ரணதுங்கா கூறியதாவது:


"இந்தியா பேட்டிங்கில் பலமாகவே உள்ளது. ஆனால் உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு பந்து வீச்சு இருப்பதாகத் தெரியவில்லை.


ரோகித் சர்மாவை...


சில நாட்களுக்கு முன் பார்க்கும்போது ஏன் இவர் இன்னும் டெஸ்ட் ஆடவில்லை என்று நினைத்தேன், நான் பார்த்ததில் அவர் ஒருவர்தான் இப்போதைக்கு திறமை வாய்ந்த வீரர், வீரத் கோலியும்தான். ஷிகர் தவான் துவங்க பேட்டிங்கைப் பொறுத்தவரை இந்தியா உண்மையில் அபாயகரமான அணியாக உள்ளது. ஆனால் பந்து வீச்சு ஊஹூம்..!


இந்திய அணி வெளிநாடுகளுக்குச் சென்று வெற்றி பெறுவது அவசியம். தென் ஆப்பிரிக்காவில் விளையாடுவது சவாலானது. உள்நாட்டில் வெற்றி பெறுவது முக்கியமானது ஆனால் அயல் நாடுகளில் நம்மை சோதித்து விடுவார்கள்.


அதேபோல் பாகிஸ்தான் பந்து வீச்சு நன்றாக உள்ளது ஆனால் பேட்டிங் பலமாக இல்லை.


இவ்வாறு கூறினார் அர்ஜுனா ரணதுங்கா.
Loading...
tamizilnews. Powered by Blogger.