Face Upward - Widget

சச்சின் 200வது டெஸ்ட்! ரசிகர்களுக்கு முன்னுரிமை இல்லை!! | Sachin's 200 Test! No priority for fans!!

Loading...



சச்சின் டெண்டுல்கர் விளையாடும் கடைசி டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் வரும் 14ஆம் தேதி தொடங்குகிறது.


மொத்தம் 33,000 இருக்கைகள் கொண்ட ஸ்டேடியத்தில் வெறும் 5,000 டிக்கெட்டுகளே ரசிகர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதை ஆன் லைனில் விற்பனை செய்ய கியாசூங்கா டாட் காம் நியமிக்கப்பட்டுள்ளது.


வெறும் 5000 டிக்கெடுகளே என்பதால் ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த வெப்சைட்டை லாக் ஆன் செய்ய அந்த சைட்டே முடங்கிப்போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


33,000 அமரக்கூடிய...ஸ்டேடியத்தில் 80% டிக்கெட்டுகள் ஏற்கனவே உள்ள அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 300 கிரிக்கெட் கிளப்புகளுக்கு 6000 டிக்கெட்டுகளும், 5 ஜிமாகான கிளப்புகளுக்கு மேலும் 6000 டிக்கெட்டுகளும், கர்வாரே கிளப்பிற்கு ஒரு 6000 டிக்கெட்டுகளும் முன்னமேயே ஒதுக்கப்பட்டுள்ளது.


இதைத் தவிர அன்பளிப்பு டிக்கெட்டுகளாக பல அரசு ஸ்தாபனங்களும் போலீஸ் அலுவலகங்களும் பெற்றுள்ளன.


இது குறித்து மும்பை கிரிக்கெட் சங்கத்தைக் கேட்டால் அராஜகமாக பதில் கூறுகிறது:


இதனைத் தவிர்க்க முடியாது, கிளப், முன்னாள் வீரர்களே எங்களுக்கு முக்கியம், அவர்கள்தான் எங்கள் முன்னுரிமை. இவர்கள் என்ன பொதுமக்கள் இல்லையா? என்று நக்கல் செய்கிறது வாரியம்.


ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.


"ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க போட்டியை நடத்துவதன் பயன் என்ன? சாதாரண ரசிகர்களுக்கு போதிய டிக்கெட் இல்லை என்றால் இந்த போட்டியினால் பயன் என்ன? என்று தொலைக்காட்சி பைட்டில் ஒரு ரசிகர் புலம்பியே விட்டார்.


நியாயமான புலம்பல்தானே? ரசிகர்கள் எங்களுக்கு முன்னுரிமை இல்லை என்று வெளிப்படையாக கூறும் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் இந்த டெஸ்டை ரசிகர்கள் புறக்கணிக்க முடிவெடுக்கவேண்டும் என்பதே நமது கோரிக்கை.
Loading...
tamizilnews. Powered by Blogger.