Face Upward - Widget

விஸ்வரூபம் 2 - மும்மொழிகளில் ஆரோ 3டி | Visvarupam 2 - 3 de Oro in 3 languages

Loading...


விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை மெருகூட்டும் வேலையை தொடர்ந்து செய்கிறார் கமல்ஹாசன். விஸ்வரூபத்தை ஆரோ 3டி சவுண்ட் தொழில்நுட்பத்தில் கேட்கும் அதிர்ஷடம் தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமே இருந்தது. தமிழ் பதிப்பை மட்டுமே ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கியிருந்தார் கமல்.


விஸ்வரூபம் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஆரோ 3டி தொழல்நுட்பத்தில் தயாராகிறது. அதற்கான மிக்சிங் வேலைகள் விரைவில் ஹாலிவுட்டில் தொடங்க உள்ளதாக கமல்ஹாசன் தெ‌ரிவித்துள்ளார்.


ஆரோ 3டி சவுண்ட் சிஸ்டத்துக்கு சத்யம், பூந்தமல்லி சுந்தர் என சில திரையரங்குகளே மாறியுள்ளன. ஆந்திராவில் இராமநாயுடு ஸ்டுடியோவும், சுரேஷ் புரொடக்சன்ஸும் விஸ்வரூபம் 2 வெளிவருவதற்குள் நூறு திரையரங்குகளையாவது இந்த நவீன தொழில் நுட்பத்துக்கு மாற்றுவதாக வாக்குத் தந்திருக்கிறார்களாம்.


சவுண்டைவிட திரைக்கதை முக்கியம். முதல் பாகத்தின் திரைக்கதை சொதப்பல் இரண்டாம் பாகத்தில் இருக்காது என நம்புவோம்.
Loading...
tamizilnews. Powered by Blogger.