Face Upward - Widget

மூன்று நாள்கள், 1800 கோடிகள் - ஒரு அடேயப்பா வசூல் | Three days, 1,800 crores - a collection of Wow

Loading...

லயன்ஸ்கேட்டின் தி ஹங்கர் கேம்ஸ் - கேச்சிங் ஃபயர் முதல் பாகத்தைவிட அதிரடியான வசூலை பெற்றிருக்கிறது. முதல் மூன்று நாட்களில் இதன் உலகளாவிய வசூல் 307.7 மில்லியன் டாலர்கள்.

கேச்சிங் ஃபயர் சென்ற வாரம் வெளியானது. யுஎஸ் தவிர்த்து 62 நாடுகள். யுஎஸ்ஸில் 160.1 மில்லியன் டாலர்களை மூன்றே நாளில் வசூலித்தது. இது 2012 ல் வெளியான ஹங்கர் கேம்ஸின் 152.5 மில்லியன் டாலர் வசூலைவிட அதிகம். உலக சினிமா சரித்திரத்தில் அதிக ஓபனிங்கை பெற்ற படங்களின் வரிசையில் கேச்சிங் ஃபயர் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.


முதலிடம் தி அவெஞ்சர்ஸ். 207.4 மில்லியன் டாலர்கள். இரண்டாவது அயன்மேன் 3 174.1 மில்லியன் டாலர்கள். ஹாரிபாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ் பார்ட் 2 169.2 மில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடம்.


ஹங்கர் கேம்ஸ் யுஎஸ்ஸில் 408 மில்லியன் டாலர்களும், பிற நாடுகளில் 283.2 மில்லியன் டாலர்களுமாக மொத்தம் 691.2 மில்லியன் டாலர்களை வசூலித்தது. கேச்சிங் ஃபயர் மூன்றே தினங்களில் யுஎஸ் தவிர்த்த பிற நாடுகளில் 146.6 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. யுஎஸ்ஸில் 161.1 மில்லியன் டாலர்கள். மொத்தமாக 307.7 மில்லியன் டாலர்கள்.


ஆக, ஹங்கர் கேம்ஸின் அனைத்து வசூல் சாதனையையும் கேச்சிங் ஃபயர் முறியடிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது.
Loading...
tamizilnews. Powered by Blogger.