Face Upward - Widget

17 மீட்டர் நீளமுள்ள எலும்பு கூடு ரூ.6 கோடிக்கு ஏலம்? | Rs 6 crore auction of for the 17-meter-long skeleton?

Loading...


உலகளவில் இதுவரை ஐந்து முறை மட்டுமே ஏலம் விடப்பட்ட அரிய வகை டைனோசர் எலும்பு கூடு, இப்போது ஆறாவது முறையாக லண்டனில் ஏலம் விடப்படுகிறது. ஆனால், இந்த 17 மீட்டர் நீளமுள்ள டைனோசர் எலும்பு கூட்டை ரூ.6 கோடி கொடுத்து வாங்க பலர் தயாராக உள்ளதாக தெரியவந்துள்ளது.


பல நூற்றாண்டுகளுக்கு முன்பு டைனோசர் என்ற ராட்சத விலங்குகள் வாழ்ந்து அழிந்துவிட்டன. தற்போது அவற்றின் முட்டைகள் மற்றும் எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.


அவ்வாறு கிடைக்கப் பெற்ற ஒரு ராட்சத டிப்லோடோகஸ் டைனோசரின் எலும்புக்கூடு வருகிற 27 ஆம் தேதி லண்டனில் ஏலம் விடப்படுகிறது.


அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்டு, நெதர்லாந்தில் முறையாக வடிவமைக்கப்பட்டு தற்போது இங்கிலாந்தில் ஏலம் விடப்பட தயாராக இருக்கும் இந்த அரிய வகை டிப்லோடோகஸ் டைனோசரின் நீளம் 17 மீட்டர் (56அடி)


விளையாட்டுத்தனமாக ஆரம்பித்து, இரண்டு பதின்ம வயதினரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எலும்பு கூடு, ரூ. 4 கோடி முதல் ரூ. 6 கோடி வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மிஸ்டி என பெயரிடப்பட்டிருக்கும் இந்த பெண் டைனோசரின் எலும்பு கூட்டை விலைக்கொடுத்து வாங்க பல அருங்காட்சியகங்கள், வணிக வளாக நிறுவனங்கள் போட்டியிடுவதாக தெரிவிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading...
tamizilnews. Powered by Blogger.