Face Upward - Widget

தவறாமல் வாக்களித்த 104, 103 வயது மூதாட்டிகள்! | Regularly voted for the 104, the 103-year-old woman!

Loading...


மிசோரமில் நேற்று நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 104 மற்றும் 103 வயதான மூதாட்டிகள் அவர்களது வாக்குகளை பதிவு செய்தனர்.


மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களின், சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது. 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டசபை தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு 81 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.


மிசோராமின் சம்பாய் மாவட்டம் லெங்டெங் தொகுதியை சேர்ந்த 104 வயது மூதாட்டி கிம்சாவ்ங்கி என்பவர் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அதே போல லியன்ஹெளி என்னும் 103 வயது மூதாட்டி பக்தவங் வாக்குசாவடியில் அவரது வாக்கினை பதிவு செய்தார்.


மத்திய பிரதேசத்தில் சுமார் 70 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்ததாகவும், மிசோரமில் இதுவரை இல்லாத அளவுக்கு 81 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...
tamizilnews. Powered by Blogger.