Face Upward - Widget

100 மில்லியன் கனவுடன் வரும் சூப்பர் ஹீரோ | Super Hero comes with 100 million Collection in dreams

Loading...

ஒரு ஆச்சரியம் என்னவென்றால், ஹாலிவுட்டில் வெளியாகும் ஒரு படம் முதல் மூன்று தினங்களில் இவ்வளவு வசூலிக்கும் என்று அங்குள்ள நிபுணர்கள் சொல்லும் கணக்கு பெரும்பாலும் பொய்ப்பதில்லை. இந்த வாரம் தோர் - தி டார்க் வேர்ல்ட் வெளியாகியுள்ளது. அதற்கும் முதல் மூன்று நாள் வசூல் கணிக்கப்பட்டிருக்கிறது.


இந்தப் படம் ஒரு வாரம் முன்பே 36 நாடுகளில் வெளியானது. முதல் மூன்று தினங்களில் ஏறக்குறைய 11 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இந்த வருடத்தின் நான்காவது பெரிய சர்வதேச வசூல். இந்த வாரம் அதாவது இன்று யுஎஸ்ஸில் வெளியாகிறது.


முதல் மூன்று தினங்களில் இப்படம் 100 மில்லியன் டாலர்களை வசூல் செய்யும் என கணித்திருக்கிறார்கள். தோர் சீரிஸின் முதல் பாகம் 2011-ல் வெளியான போது மூன்று தினங்களில் 65 மில்லியன் டாலர்களை வசூலித்திருந்தது. அதன் பிறகு தோர் கதாபாத்திரம் தி வெஞ்சர்ஸ் படத்திலும் இடம்பெற்றது. அதனால் தோரின் மார்க்கெட் வேல்யூவும் அதிகரித்தது. அதன் காரணமாகவே படம் ஓபனிங்கில் 100 கோடியை வசூலிக்கும் என்று கணித்திருக்கிறார்கள்.


தோர் போன்ற சூப்பர் ஹீரோக்களை நம்பிதான் ஹாலிவுட்டின் பிரமாண்ட ஸ்டுடியோக்கள் இருக்கின்றன.
Loading...
tamizilnews. Powered by Blogger.