Face Upward - Widget

+1 மாணவி கர்ப்பம்! திருமணமானவர் கைது! | +1 Pregnant girl! Married Man arrested! |

Loading...


சென்னையில் பிளஸ்-1 மாணவியை கற்பழித்து, கர்ப்பமாக்கியதாக உறவுக்கார வாலிபர் கைது செய்யப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த வாலிபருக்கு திருமணம் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


சென்னை சேத்துப்பட்டு, எஸ்.எம்.நகரைச் சேர்ந்தவர் இந்த மாணவி. இவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார். அதே பகுதியில் உள்ள ஜெகநாதபுரம், 6-வது தெருவில் வசிப்பவர் கவுதமன் (28). இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில், உதவி கேமராமேனாக வேலை பார்த்தார். மாணவி இவருக்கு நெருங்கிய உறவினர் என்று தெரிகிறது.


மாணவி வயிறு வழக்கத்துக்கு மாறாக பெரிதாக இருந்தது. அவரை ஆஸ்பத்திரியில் சோதித்து பார்த்தபோது, அவர் 6 மாதம் கர்ப்பம் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. மாணவியின் தாயார், இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளானார். தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு, கவுதமன்தான் காரணம் என்று மாணவி தெரிவித்தார்.


கவுதமன் ஏற்கனவே திருமணமானவர்..
2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அவரது மனைவி 2-வதாக தற்போது கர்ப்பம் அடைந்துள்ளார். மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில், மாணவியை தனது வீட்டிற்கு வரவழைத்து, மிரட்டி, கவுதமன் உல்லாசம் அனுபவித்ததாக தெரிகிறது. அதன் விளைவாகவே மாணவி கர்ப்பமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.


மாணவியின் தாயார், இந்த சம்பவம் தொடர்பாக சேத்துப்பட்டு போலீசில் புகார் கொடுத்தார். மைனர் பெண்ணை கற்பழித்து, கர்ப்பமாக்கியதாக, கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து, சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விசாரணை நடத்தினார்.


கவுதமன் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர் நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
Loading...
tamizilnews. Powered by Blogger.