Face Upward - Widget

There is a limit to glamor - Actress Iniya interview | கவர்ச்சிக்கு எல்லை உண்டு - நடிகை இனியா பேட்டி

Loading...

தமிழுக்கு கிடைத்த நல்ல நடிகை இனியா. ஆனால் அவரை அழ வைத்தே காணாமலடித்துவிட்டார்கள். முக்கியமாக அம்மாவின் கைப்பேசி. அந்த அழுக்காச்சி காவியத்திலிருந்து மெல்ல மீண்டு வருகிறவர், கடை திறப்பு விழாவுக்காக ஈரோடு வந்தபோது நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.


தமிழுக்குதான் முதலிடம்


நான் 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே ஹிந்தி சினிமாவில் நடிக்கிற வாய்ப்பு வந்தது. படித்துக் கொண்டிருந்ததால் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். பத்தாம் வகுப்பு முடித்த பின் மலையாளத்தில் ஒரு படம் நடித்தேன். ஆனால் நல்ல நடிகை என்ற அந்தஸ்தை எனக்கு தமிழ் சினிமாதான் தந்தது. அதனால் தமிழ் சினிமாவுக்குப் பிறகுதான் எனக்கு பிற மொழிப் படங்கள்.


நகரமா, கிராமமா?

எனக்கு பொருத்தமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். வாகை சூட வா படத்தைப் பற்றி எல்லோரும் கேட்கிறார்கள். ஆனால் அப்படியான படங்கள் எப்போதும் அமைவதில்லை. நகரம், கிராமம் என்று எந்த பேதமும் இல்லை. கிராமத்துக் கதைகளுக்கும், நகரத்து கதைகளுக்கும் என்னுடைய முகம் ஒத்துப் போகும் என்பது என்னுடைய நம்பிக்கை. எனவே எல்லாவிதமான கதைகளிலும் என்னால் சிறப்பாக நடிக்க முடியும்.


விருப்பம்

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருடனும் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னோட ஆசை. அதிலும் ரஜினி சாருடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நடிகைகளில் பானுப்ரியா, ஸ்ரீதேவி, சிம்ரன், ஜோதிகா என்று பலரை பிடிக்கும். ஆனால் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. எனக்கு நான் மட்டும்தான் போட்டி. எனக்கென்று தனியிடத்தை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.


புதிய படங்கள்

தமிழில் புலிவால், நினைத்தது யாரோ உள்பட 5 படங்களில் நடித்து வருகிறேன். அதேநேரம் படிப்பையும் விடவில்லை. பி.பி.ஏ. இரண்டாம் வருடம் படிக்கிறேன். ஆக்ஷன் படங்களில் நடிக்க எனக்குப் பிடிக்கும். ஒரு படத்திலாவது ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்க வேண்டும். அதேமாதிரி டான்சரின் வாழ்க்கையை சித்தரிக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.


பாரதிராஜா படம்

பாரதிராஜாவின் படத்திலிருந்து வெளியேறியதுக்கு நான் காரணமில்லை. அமீர் அந்தப் படத்திலிருந்து விலகியதால் படத்தின் போக்கே மாறிவிட்டது. அதனால்தான் படத்திலிருந்து விலகினேன்.


கவர்ச்சி

சினிமாவில் கவர்ச்சி என்பது தவிர்க்க முடியாதது. கவர்ச்சியாக நடிக்கும்படி வந்தால் நடிப்பேன். அதேநேரம் கவர்ச்சிக்கும் ஒரு எல்லை உண்டு. கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிய பல நடிகைகள் போகப்போக டூ பீஸ் மாதிரியான உடைகளில் நடித்திருக்கிறார்கள். எனவே அதுமாதிரியான வாக்குறுதிகள் எதையும் தர முடியாது. சினிமாவில் அப்படியான வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாது.
Loading...
tamizilnews. Powered by Blogger.