Face Upward - Widget

Tamil Puthir Vina Vidai | புதிர் கதை

Loading...
அரபு நாடு ஒன்றில் ஒரு இளைஞன் வேலைக்குச் சென்றிருந்தான். வார இறுதியான ஒரு வெள்ளிக்கிழமையில், அவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலைவனத்துக் கிராமங்களைச் சுற்றிப் பார்க்கச் சென்றான்.அங்கே ஒரு பேரீச்ச மரம் இருந்தது. சாதாரன பேரீச்சமரங்களைப் போல் இல்லாமல் அந்த மரம் மிகவும் உயரமாக வளர்ந்திருந்தது.அதில் கொத்துக் கொத்தாக பேரீச்சம் பழங்கள் காய்த்துத் தொங்கிக்கொண்டிருந்தது. கீழே விழ்ந்து கிடந்த ஓரிரு பழங்களை எடுத்து அவனும் அவனது நண்பர்களும் சுவைத்தார்கள்.ஆஹா....என்ன அற்புதமான சுவை' என்று வியந்தார்கள். அந்த இளைஞனுக்கு பேரீச்சம்பழங்களைப் பறித்து கையோடு கொண்டு செல்லும் ஆர்வம் மேலிட்டதனால், அவனது நண்பர்களிடம், தான் மரத்தில் ஏறி பழங்களைப் பறிக்கப்போவதாகக் கூறினான். முதலில் அவர்கள் ஏன் வீண் வம்பு என்று தடுத்தார்கள்.அந்த மரத்துக்குக் கீழே ஒரு முதிய அராபியர் நிழலில் படுத்திருந்தார். அவர் இளைஞனது ஆர்வத்தைக் கண்டு, பழம் வேண்டுமானால் மரத்தில் ஏறிப் பறித்துக்கொள்ளும்படி கூறினார்.விதி யாரை விட்டது. ? .அந்த இளைஞனும் மரத்தில் ஏறினான்.


வேண்டுமட்டும் பழங்களைப் பறித்தான்..திடீரென்று இளைஞன் கைநழுவி மரத்தின் மேலிருந்து கீழே விழுந்தான். நேராக கீழே படுத்திருந்த முதிய அராபியனின் மார்பின்மேல் விழுந்தான். அந்த அதிர்ச்சியும், வலியும் தாங்காமல் அராபியன் இருதயம் பாதிக்கப்பட்டு, உடனே உயிரிழந்தான்.

பிறகு சட்டப்படி எல்லாம் நடந்தது. இளைஞன் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டான்.வழக்கை விசாரித்த நீதிபதி, கருணை உள்ளம் கொண்டவர். என்னதான் இஸ்லாமிய சட்டப்படி தீர்ப்பு வழங்குவதென்றாலும், அதில் கொஞ்சம் சிந்தனையும் செய்யவேண்டும் என்ற கோட்பாடு உடையவர்.அதனால், இறந்த முதியவரின் மனைவியை அழைத்தார். இளைஞனுக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்று கேட்டார். அந்தப் பெண்ணோ, உயிருக்கு உயிர்தான் சரியானது. அதுதான் நமது சட்டம் கூறுகிறது. அதனால் அவனுக்கு மரணம்தான் தீர்ப்பாக இருக்கவேண்டும் என்றாள்.
நீதிபதி அவளைப் பார்த்து, " பெண்ணே, இந்தக் குற்றத்தை அவன் திட்டமிட்டுச் செய்யவில்லை. தற்செயலாக நடந்தது. அதனால், அவனுக்கு பெரும் அபராதம் விதிக்கிறேன். அந்தத் தொகையை நீ வாங்கிக்கொள். இளைஞனை விட்டுவிடுவோம். எதுவாக இருந்தாலும் நீ சம்மதித்தால்தான் நான் இந்தத் தீர்ப்பைச் சொல்லமுடியும்" என்றார்.
அவளோ முடியாது என்று மறுத்து, இளைஞனை கொல்லவேண்டும் என்பதிலேயே பிடிவாதமாக இருந்தாள்.

வேறு வழியில்லாத நீதிபதி, இளைஞன் சாகவேண்டும் என்றே தீர்ப்பு வழங்கினார்.
ஆனால் அவரின் தீர்ப்பைக் கேட்ட அந்தப் பெண், திகைத்து," நீதிபதி அவர்களே......நான் வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்....இளைஞனைக் கொல்லவேண்டாம்."என்றாள்.
முதலில் நீதிபதி வேண்டியதற்குப் பிடிவாதமாக மறுத்த அவள், தீர்ப்பைக் கேட்ட பிறகு ஏன் மன மாற்றம் அடைந்தாள்?
மன்ற நண்பர்களே....நீங்கள்தான் கூறவேண்டும்.


இது என் விடை

தான் எடுத்துக் கூறியும் கேட்காத பெண்ணின் பிடிவாத குணத்தைப் பார்த்த நீதிபதி கீழ்கண்டவாறு தீர்ப்பை கூறி இருப்பார்.

இளைஞனுக்கு சட்டப்படி மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று நீ சொல்கிறாய், சரி.

எப்படி உன் கணவன் இறந்தாரோ அதே முறையில் இந்த இளைஞனும் தண்டிக்கப்பட வேண்டும். உன் கணவன் போல் இவன் மரத்தின் கீழ் படுத்திருப்பான், நீ மரத்தின் மேல் ஏறி இவன் மேலே விழுந்து சாகடிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியிருப்பார்.

அதை கேட்ட அந்த முதிய பெண், ஆளை விட்டால் போதுமடா சாமி என்று நினைத்து மரண தண்டனை ரத்து செய்ய சொல்லியிருப்பார்.
Loading...
tamizilnews. Powered by Blogger.