Face Upward - Widget

ஸ்மார்ட் போனில் 'மோடி ரன்'! கலக்கத்தில் காங்கிரஸ்! | Smart phone 'Modi run'! Congress tense about the game!

Loading...


மத்திய பிரதேச சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மொபைல் போன்களில், 'மோடி ரன்' கேம் மற்றும் 'சிவ்ராஜ் ஆப்ஸ்' அப்ளிகேஷன்கள் என சில அம்சங்களை பாஜக கையில் எதுத்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.


'இது தேர்தல் விதிமுறைகளை மீறிய நடவடிக்கை; தடை விதிக்க வேண்டும்' என, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் செய்துள்ளது. பாரதிய ஜனதாவைச் சேர்ந்த, முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான, மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அது போல், பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளார்.


இந்நிலையில், மத்திய பிரதேச மாநில காங்கிரஸ், மாநில தேர்தல் அதிகாரியிடம், 'மோடி ரன்' மற்றும் 'சிவ்ராஜ் ஆப்ஸ்', மொபைல் போன் அப்ளிகேஷன்களை தடை செய்ய வேண்டும் என கோரி மனு அளித்துள்ளது.இது குறித்து, அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர், நரேந்திர சலூஜா இதுகுறித்து நேற்று கூறுகையில்,


'மோடி ரன்' என்ற, மொபைல் போன் விளையாட்டு அப்ளிகேஷனும், 'சிவ்ராஜ் ஆப்ஸ்' என்ற அப்ளிகேஷனும், அப்பட்டமாக, பா.ஜ.,வின் தேர்தல் பிரசார ஊடகங்களாக விளங்குகின்றன. அவற்றை தடை செய்ய வேண்டும். சிவ்ராஜ் அப்ளிகேஷனில் உள்ள பாடல், அப்படியே, மத்திய பிரதேச மாநில அரசின் பாடலாகவே உள்ளது.


அந்த அப்ளிகேஷனை, டவுன்லோடு செய்தால், முதலமைச்சர், சவுகானின் சாதனைகள் மொபைல் போனில் தெரிகிறது.


இதை, பா.ஜ.க தவிர வேறு யாரும் செய்திருக்க முடியாது. மேலும் அதில், சவுகான் படம், பா.ஜ.,வின் தாமரை சின்னம் போன்றவையும் உள்ளன.


மேலும், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துகளை, பா.ஜ.கவினர், 'வாட்ஸ் ஆப்' மற்றும் 'பேஸ்புக்' இணையதளங்களில் பரப்பி வருகின்றனர். அதையும் தடை செய்ய வேண்டும். முக்கியமாக, 'மோடி ரன்' என்ற பெயரிலான, மொபைல் அப்ளிகேஷன், வாக்காளர்களின் மனநிலையை மாற்றக் கூடியது என்பதால், அதை தடை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கோரிஉள்ளார்.


ஸ்மார்ட் மொபைல் போன்கள் 'ஆண்ட்ராய்டு' தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடியது, இந்த, 'மோடி ரன்' விளையாட்டு. இதில், டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில், பா.ஜ.க பிரதமர் வேட்பாளர், மோடி, தடைகளை தகர்த்தெறிந்து, ஓடி ஓடிச் சென்று, பாயின்ட்டுகளை எடுத்து, நாடாளுமன்றத்திற்குள் நுழைவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை, அமெரிக்காவைச் சேர்ந்த, 'டெக்சா டி' என்ற, விளையாட்டு மென்பொருள் நிறுவனம் வடிவமைத்துள்ளது.


இதுவரை, ஐந்து லட்சம் பேர், பதிவிறக்கம் செய்துள்ளனர். அவர்களில், 5,000 பேர், விளையாட்டு பிரமாதமாக இருப்பதாக, 'கமென்ட்ஸ்' எழுதியுள்ளனர். அந்த நிறுவனம், 'இந்த விளையாட்டிற்கும், பா.ஜ.க வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது, அரசியல் தொடர்பான அப்ளிகேஷன் அல்ல; முழுக்க முழுக்க விளையாட்டு, பொழுதுபோக்கு தொடர்பானது' என, தெரிவித்துள்ளது.
Loading...
tamizilnews. Powered by Blogger.