Face Upward - Widget

காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் செய்கிறார் சச்சின்? | Sachin is campaign for the Congress party?

Loading...




மத்தியப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத் தயாரிப்புகள் உச்சத்தை எட்டியுள்ளன. மாநில காங்கிரஸ் தலைமை ஜபல்பூர் நகர காங்கிரஸ் கமிட்டியிடம் பிரச்சாரம் செய்யப்போகிறவர்கள் பட்டியலைக் கேட்டுள்ளது.


இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா ஆகியோர் உட்பட பல பிரபலங்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.


பல்வேறு சாதியினரையும் மடக்கிப் பிடிக்கும் எண்ணத்துடன் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.


இவ்வளவு பிரபலங்கள் இருந்தும் திக்விஜய் சிங் மட்டும் வேண்டாம் என்று மத்தியப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. காரணம் அவரது பேச்சு வாக்குகளை விரட்டியடிக்கும் என்று கட்சித்தலைமை கருதுகிறதாம்!


திக் விஜய் சிங் வேண்டாம் ஆனால் சச்சின் தேவை! சபாஷ் காங்கிரஸ்!
Loading...
tamizilnews. Powered by Blogger.