ஈழ அகதிகளின் வலி சொல்லும் ராவண தேசம் டிரெய்லர் வெளியீடு - வீடியோ இணைப்பு | Ravana Thesam - Teaser
Loading...
இலங்கை அகதிகளின் சோக கதையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வந்திருக்கிறது. முதன் முறையாக நடுக்கடலில் தத்தளித்த அகதிகளின் கண்ணீர் கதையை சொல்லும் படம் ‘ராவண தேசம்’.
இலங்கை அகதிகள் சிலர் இலங்கையில் இருந்து அகதிகளாக கப்பலில் மாதக் கணக்கில் பயணம் செய்து அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் வழிதவறி தாய்லாந்துக்கு சென்றதும்.
அந்த நாடு அவர்களை உள்ளே அனுமதிக்காததால் நடுக்கடலில் தவித்த அவர்கள் கொத்து கொத்தாக செத்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுத்திருக்கிறார்களாம்.
அஜெய் என்பவர் இயக்கி நாயகனாக நடித்துள்ளார். ஜெனிபர் என்பவர் நாயகி. படத்தில் நடித்திருக்கும் அனைவருமே சினிமாவுக்கு புதுமுகங்கள்.
"அகதியாக கடலில் திகில் பயணம் மேற்கொண்டு ஒருவரின் அனுபவத்தின் அடிப்படையிலேயே இது உருவாக்கப்பட்டுள்ளது.
"லைப் ஆப் பை" போல பெரும்பகுதி படம் நடுக்கடலில் நடக்கிறது. நிஜமாகவே கடலில் படமாக்கி இருக்கிறோம். உலகம் அறிந்திராத இலங்கை அகதிகளின் இன்னொரு வலியை பதிவு செய்திருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் அஜெய்.
Loading...
No comments: