‘ஊதாக் கலரு ரிப்பனை’ தேடிப் போன ‘பென்சில்’!
Loading...
வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நாயகி ஸ்ரீதிவ்யாதான் இப்போது கோடம்பாக்கத்தின் புதிய இயக்குநர்கள் சாய்ஸ். அடக்கமான அழகு, கிராமத்து உடை- நாகரீக உடை என அனைத்திலுமே மனதைக் கவரும் தோற்றம்…
போதாக்குறைக்கு பார்வையாளர்களைத் துள்ள வைக்கிற இளமையும் நடிப்பும்…. இது போதாதா..
முதல் படத்திலேயே டிஸ்டிங்ஷனில் பாஸ் பண்ணிவிட்ட ஸ்ரீதிவ்யாவுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள். அதுவும் முன்னணி நாயகியான ப்ரியா ஆனந்தைத் தூக்கிவிட்டு, இவரை ஒப்பந்தம் செய்யும் அளவுக்கு! ஜிவி பிரகாஷ் முதல்முறையாக ஹீரோவாக நடிக்கும் பென்சில் படம் குறித்த செய்தியை ஏற்கெனவே தந்திருந்தோம்.
இந்தப் படத்துக்கு முதலில் ப்ரியா ஆனந்த்தான் நாயகி என்று அறிவித்துமிருந்தார்கள். இந்தப் படத்தில் ப்ளஸ்டூ மாணவராக நடிக்கிறார் ஜிவி பிரகாஷ்.
ப்ரியா ஆனந்த் ஜோடியாகத் தெரிவாரா.. டீச்சர் மாதிரி தெரிவாரா என்ற சந்தேகம்
வந்துவிட்டதாம். எனவே அவருக்குப் பதில், பார்க்க ஒரிஜினல் ப்ளஸ்டூ மாணவி மாதிரியே காட்சி தரும் ஸ்ரீதிவ்யாவை ஒப்பந்தம் செய்துவிட்டா்ரகளாம்.
Loading...
No comments: