Face Upward - Widget

முகத்திற்கு பொலிவு தரும் இயற்கை ஃபேஸ் பேக் | Natural Glow Face to face Pack

Loading...

1. கடல் உப்பை மணல் பதத்திற்கு இளம் சூடான தண்ணீரில் கலக்கவும். முகத்தை ஆவியில் காட்டவும். பின்னர் உப்பு பூச்சைத் தடவவும். 15-20 நிமிடங்களுக்குப் பிறகு குளிர் நீரில் கழுவவும். கடல் உப்பு சரும துவாரங்களை அடைத்துப் பொலிவும் புத்துணர்ச்சியும் கொடுக்க வல்லது.


2. முட்டை வெள்ளையை நன்கு நுரை வரும் வரை அடித்துத் அதில் 1 ஸ்பூன் தேனைக் கலக்கவும். முகத்தில் கண்ணைத் தவிர மற்ற இடங்களில் தடவவும். 10 நிமிடம் கழித்து குளிர் நீரால் கழுவவும்.


மிச்சம் இருப்பதை சில நாட்களுக்குக் குளிர் சாதன பெட்டியில் வைக்கலாம். உபயோகிக்கும் முன் கலவையை நன்கு கலக்கவும்.


3. பால் 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு 1 ஸ்பூன், பிராந்தி 1 ஸ்பூன் எடுத்து கொண்டு அதை நன்றாக கலந்து முகத்தில் தடவவும்.10 - 15 நிமிடத்திற்குப் பிறகு குளிர் நீரால் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் முகத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்.


4. 1/2 கப் பால், 1 ஸ்பூன் இளம் சூடான நீர்,3/4 ஸ்பூன் பால் சேர்த்து மூன்றையும் நன்கு குழைய கலக்கவும். முகம், கழுத்தில் தடவவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு முகம் கழுவி மீண்டும் தடவவும். 10 நிமிடத்திற்குப் பிறகு முதலில் இளம் சூடான நீரிலும், பின் குளிர் நீரிலும் கழுவவும்.
Loading...
tamizilnews. Powered by Blogger.