Face Upward - Widget

வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்ட பெண்கள் | Married women who had left the house

Loading...


பீகாரை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் அவர்களின் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பள்ளிப்பருவம் முதலே நெருங்கிய தோழிகளாக இருந்த இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது.


இவர்களின் இந்த நெருக்கத்தை கண்டித்த பெற்றோர்கள், அவர்களை பிரிக்கவும் முயற்சி செய்துள்ளனர். ஆண்-பெண் காதலை போன்று அனைத்து பிரச்சனைகளையும் சந்தித்த இவர்கள் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறினர்.


இச்சம்பவத்திற்கு பின்னர் இரு பெண்களில், ஒரு பெண்ணின் பெற்றோர் மற்றொரு பெண் வீட்டார் மீது கடத்தல் புகார் அளித்தனர். இதை அடுத்து இரண்டு பெண்களையும் தேடிவந்த போலீசார், அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டு, விடுதி ஒன்றில் வசித்துவருவதை தெரிந்துக்கொண்டனர்.


அவர்களது செல்போனை வைத்து அவர்களை கண்டுப்பிடத்த போலீசார் அவர்கள் பாட்னா நீதிமனறத்தில் ஆஜர்படுத்தபடுவார்கள் என தெரிவித்துள்ளனர்.


பீகாரில் நடைபெற்ற முதல் ஓரின சேர்க்கை திருமணம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...
tamizilnews. Powered by Blogger.