Face Upward - Widget

மணிக்கணக்காக சேட்டிங் செய்யும் மார்மோஸட் குரங்குகள் | Marmosat monkeys for hours to chat

Loading...

மார்மோஸட் இனக் குரங்குகள் பல மணி நேரமாக மனிதர்களை போல உரையாடிக்கொள்கின்றன. அதிலும் அழகாக மற்றொரு குரங்கு பேசுவதை கேட்டு பொருமையாக யோசித்து அதற்கு பதிலளிக்கிறது.


"உலகிலேயே மிகச் சிறிய குரங்கினமான மார்மோஸட்கள் 8 அங்குல நீளம் கொண்டவை. 30 நிமிடங்கள் வரை தொடர்ந்து இவை ஒன்றுக்கொன்று உரையாடிக்கொள்ளும் காட்சி பதிவுசெய்யப்பட்டுள்ளது.




மார்மோஸட் குரங்குகளின் உரையாடல்களை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இது குறித்து பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிஃப் காஸன்ஃபார் கூறுகையில்,


இவற்றின் உரையாடல்கள் பறவை, தவளை போன்ற மற்ற விலங்கினங்கள் எழுப்பும் குரலோசையில் இருந்து வேறுபட்டு மனித உரையாடல்களுடன் ஒத்துள்ளன. இதன்காரணமாகவே மார்மோஸட் குரங்குகள்


சிம்பன்ஸி, மனிதக் குரங்குகள் போன்ற மற்ற குரங்கினங்களிலிருந்து முழுமையாக வேறுபட்டு தனித்தன்மையுடன் உள்ளன.


ஒன்றுக்கொன்று நட்புடன் பழகுவது, தகவல் தொடர்புகளுக்கு உரையாடல் சப்தங்களை எழுப்புவது ஆகியவற்றில் மனிதர்களுடன் ஒத்துள்ளன. இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் உரையாடிகொள்ளும் மார்மோஸட்கள், ஒரு குரங்கு பேசுவதையும் அதன் மனதையும் நன்கு புரிந்து கேட்கிறது.


மனிதர்கள் கூட புரிதல் இல்லாமல் பேசி கொள்ளும் இந்த காலக்கட்டத்தில், மார்மோஸட் குரங்குகள் இனிமையாக பேசி கொள்ளும் காட்சி சுவாரஸியத்தை கூட்டுகிறது.


மார்மோஸடின் இந்த நடவடிக்கைகள் இத்தனை காலம் கண்டுபிடிக்கப்படாமலே இருந்துள்ளது.
Loading...
tamizilnews. Powered by Blogger.