Face Upward - Widget

Kajal Agarwal Sister Going to marry a businessman | மாப்பிள்ளை தொழிலதிபராம் : காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலுக்கு திருமணம்

Loading...

தொழிலதிபர்களுக்கும், நடிகைகளுக்கு அப்படி என்னதான் அக்ரிமெண்ட்டோ தெரியவில்லை. தொழிலதிபர்கள் என்றாலே நடிகைகளை திருமணம் செய்து கொள்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.


அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட் வரவு தான் நடிகை நிஷா அகர்வால். தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் காஜல் அகர்வாலின் தங்கையான இவருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கரணுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.


கடந்த 2010 ஆண்டு தெலுங்கு பட உலகில் ஹீரோயினாக அறிமுகமானார் நிஷா அகர்வால். ஆனால் அக்கா அளவுக்கு அவரால் முன்னணி ஹீரோயின் இடத்தைப் பிடிக்க முடியவில்லை. தமிழில் விமல் ஜோடியாக ‘இஷ்டம்’ என்ற படத்தில் நடித்தார் நிஷா.


அந்தப்படமும் தோல்விப்படமாக அமைந்ததால் மீண்டும் தெலுங்கு பக்கம் போனார். நிஷா இப்போது நடித்துக்கொண்டிருக்கும் ஒரே ஒரு படத்தையும் சேர்த்து நடித்த மொத்தப்படங்களின் எண்ணிக்கை வெறும் 6 தான்.


அந்தப்படமும் ஷூட்டிங் முடியப் போகும் நிலையில் தற்போது சினிமாவுக்கு முழுக்குப் போட்டி விட்டு திருமணத்துக்கு தயாராகி விட்டார் நிஷா அகர்வால்.


நிஷா அகர்வால், தொழிலதிபர் கரணின் திருமணம் வருகிற டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக நடைபெற உள்ளது.


அக்கா காஜல் அகர்வால் தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் இப்போதைக்கு அவர் திருமணம் செய்யவில்லை.


அவரது மார்க்கெட்டும் தங்கை நிஷாவைப் போல டல்லாகும் நேரத்தில் அவருக்கு ஒரு தொழிலதிபருக்கு வாக்கப்படுவார் என்று நம்பலாம்.
Loading...
tamizilnews. Powered by Blogger.