Face Upward - Widget

‌ஜில்லா - வெளிநாடு லொகேஷன் மாற்றம் | Jilla - Away Change Location

Loading...


ஜில்லா படத்தின் பெரும்பாலான டாக்கி போர்ஷன்கள் முடிந்துவிட்டன. மோகன்லால் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் மட்டுமே பாக்கி. நவம்பர் இறுதியில் அதனை படமாக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னால் இம்மாத இறுதியில் பாடல் காட்சிகளை படமாக்க பல்கே‌ரியா செல்வதாக திட்டம்.


ஆனால் தற்போது பல்கே‌ரிய பயணத்தை கேன்சல் செய்துள்ளனர். ஏன்...?


பல்கே‌ரியாவில் காலநிலை விஜய்யும், காஜல் அகர்வாலும் டூயட் பாடுவதற்கு சாதகமாக இல்லையாம். அதனால் பல்கே‌ரியா பயணத்தை ரத்து செய்து அதற்குப் பதில் ஐப்பானை தேர்வு செய்திருக்கிறார்கள். விஜய் பாடல் காட்சிகளுக்காக ஐப்பான் செல்வது இது மூன்றாவது முறை.


நேசன் இயக்கத்தில் தயாராகும் ‌ஜில்லாவில் மோகன்லால், பூர்ணிமா பிரதான வேடங்களில் நடித்துள்ளதால் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. டி.இமான் இசையமைத்துள்ளார்.
Loading...
tamizilnews. Powered by Blogger.