Face Upward - Widget

கங்கனாவுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை: பிரியங்கா சோப்ரா | I do not have any problems with Kangana: Priyanka Chopra

Loading...

இந்தி நடிகர் ராகேஷ் ரோஷன் தயாரித்து, இயக்கும் படம் 'கிரிஷ்-3'. இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா, கங்கனா ரணாவத் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.


இப்படத்தின் படப்பிடிப்புகளில் ஒன்றாக கலந்துகொண்ட பிரியங்காவும், கங்கனாவும் தற்போது படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்ள மறுப்பு தெரிவிக்கிறார்களாம்.


இருவரும் தனித்தனியாக விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுகுறித்து, கங்கனாவிடம் கேட்டபோது, அவர் இதனை மறுத்துவிட்டார். தாங்கள் இருவருமே நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வதாகவும், இதுபோன்ற தகவல்கள் எவ்வாறு வெளிவருகின்றன என ஆச்சர்யப்படுகிறார்.


பிரியங்கா சோப்ராவிடம் கேட்டபோது, எனக்கும் கங்கனாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. படத்திலும் ஒரு காட்சியில் நாங்கள் இருவரும் ஒன்றாக நடிக்கிறோம்.


நான் இதற்கு முன்னர் இரண்டு நாயகிகள் கொண்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். என்னுடைய காட்சிகளில் கவனம் செலுத்துவதைத் தவிர மற்றவர்களைப் பற்றி நான் யோசித்ததில்லை.


இவ்வாறு அவர் கூறினார்.
Loading...
tamizilnews. Powered by Blogger.